சீடை / Seedai
- இட்லி அரிசி - 2 கப் ( 400 கிராம் )
- பாதியாக உடைத்த வெள்ளை உளுந்தம் பருப்பு - 100 கிராம்
- பொட்டுக்கடலை - 50 கிராம்
- வெண்ணெய் - 25 கிராம்
- தேங்காய் துருவல் - 200 கிராம்
- எள் - 2 மேஜைக்கரண்டி
- சீரகம் - 2 மேஜைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- சுடுவதற்கு எண்ணைய் - தேவையான அளவு
செய்முறை -
- அரிசியை நன்றாக கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பின் அரிசியுடன் உப்பு சேர்த்து கிரைண்டரில் இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் தீயை சிம்மில் வைத்து உளுந்தம் பருப்பை போட்டு லேசாக வறுத்து சிறிது நேரம் ஆற விடவும்.
- ஆறிய பின் மிக்ஸ்சியில் திரித்துக் கொள்ளவும். பொட்டுக்கடலையையும் மிக்ஸ்சியில் திரித்துக் கொள்ளவும்.
- தேங்காய் துருவலை மிக்ஸ்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
- பிறகு அரைத்து வைத்துள்ள அரிசி மாவோடு உளுந்த மாவு, பொட்டுக்கடலை மாவு, தேங்காய் துருவல், வெண்ணைய், எள், சீரகம் சேர்த்து கெட்டியாக பிசைந்து வைக்கவும்.
- பிறகு மாவை கொஞ்சம் எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெய் தடவிய தட்டில் வைக்கவும். ரொம்ப உருட்டாமல் லேசாக உருட்டி போடவும். மீதமுள்ள எல்லா மாவையும் இதே போல் உருட்டி போடவும்.
- அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணைய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைத்து கடாய் கொள்ளும் அளவுக்கு சீடைகளை எடுத்து போடவும்.
- சீடைகள் பொன்னிறமானதும் எடுத்து வடிதட்டில் போடவும்.
- எண்ணெய் நன்கு வடிந்தவுடன் சீடைகளை எடுத்து காற்றுப்புகாத பாட்டில் அல்லது டப்பாவில் எடுத்து வைக்கவும். சுவையான சீடை ரெடி.
Seedai looks tempting. Well explained.
ReplyDeleteSuperb akka romba nala iruku
ReplyDeleteThank you Sangeetha.
ReplyDelete