இன்றைய நாகரீக உலகில் 6 வயது முதல் 60 வயது வரை கணினியில் பேஸ்புக், டிவிட்டர் போன்ற இளைய தளங்களில் மூழ்கி இருக்கிறார்கள். கணினியில் உலகமே உள்ளங்கையில் இருப்பதால் தனிமை என்று ஓன்று இருப்பதை மறந்து கணினியோடு சிலர் பொழுதை கழித்து விடுகிறார்கள்.
தனிமை இரண்டு வகைப்படும். ஓன்று நம் சந்தோஷத்திற்காக நாமே தனிமையை விரும்பும் போது அந்த தனிமை நமக்கு இனிமையை கொடுக்கும். கடவுளை வணங்க, நல்ல கவிதையை வாசிக்க தனிமை அவசியம்.
தனிமை நம்மை தானாக தேடி வருவது இரண்டாவது வகையாகும். வாழ்க்கையில் ஏமாற்றம், துரோகம் என்று ஏதாவது ஒரு காரணத்தால் மன வேதனைக்குள்ளாகி தனிமையை சந்தித்து அதனால் ஏற்ப்படும் இந்த தனிமை நமக்கு கசப்பை கொடுக்கும். சிலர் மன உளைச்சலுக்கு கூட ஆளாவது உண்டு. இவர்கள் நாம் இனி யாரையும் நம்ப வேண்டாம் என்றும், பிறருடன் சேர்ந்து பாதிக்கப்படுவதை விட நாம் தனியாக நிம்மதியாக இருக்கலாம் என்று நினைப்பார்கள்.
இந்த முடிவு நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்து வராது. இந்த தனிமை வாழ்க்கை ஒரே நாளில் வெறுத்து விடும். எனவே தனிமையை மறக்க உங்களுக்கு உபயோகப்படும் வகையில் பொழுதுபோக்கு விஷயங்களை மாற்றி அமைக்கலாம். காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்து மனநிலையை நல்லபடியாக வைத்துக் கொள்ளலாம்.
எனவே இந்த சிக்கலான தனிமை வாழ்க்கையிலிருந்து விடுபட முதலில் நம் வீட்டிலுள்ள்ள அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நமக்கு வேண்டிய சந்தோஷம் நம் வீட்டிலேயே கிடைக்கும். பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் மனம் விட்டு பேசினால் எளிதாக தீர்ந்து விடும். எல்லா விஷயங்களையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டால் தான் வாழ்க்கை இனிமையாக இருக்கும். தனிமை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய் விடும்.
எல்லோரும் மனதை ஒருநிலைப் படுத்திக்கொண்டு தனிமை என்ற சொல்லை மறந்து குடும்பத்தினர், உறவினர்கள், சிநேகிதர்கள் என்று எல்லோரிடமும் இனிமையாக பேசி வாழ்ந்தால் ஆயுளும் நீடிக்கும். வீடும் சொர்க்கமாக மாறி விடும்.
எனவே தனிமை வாழ்க்கையை மறந்து கூடி வாழ்ந்து கோடி நன்மைகளை பெறுவோம்!
நன்றி
சாரதா
அருமையான மெசேஜ் அக்கா. நல்ல பகிர்வு.
ReplyDeleteஅன்பு தமிழ் உறவே!
ReplyDeleteவணக்கம்!
இன்றைய வலைச் சரத்தின்,
திருமதி R..உமையாள் காயத்ரி அவர்களின்
வலைச்சரத்தில் - ஒரு - கதம்ப - மாலை.
சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
வாழ்த்துகள்!
வலைச் சரம் வானத்தில் வானவில்லாய்
உமது பதிவின் எழில் முகம் கண்டேன். களிப்புறேன்.
உவகை தரும் உமது பதிவுகள் உயிரோவியமாய் திகழட்டும்!
தேன் தமிழாய் சுவைக்கட்டும்! திகட்டாமல் திக்கெட்டும்.
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
(குழலின்னிசையின் உறுப்பினராகி உவகை தர வேண்டுகிறேன் நன்றி)
வலைச்சரத்தில் எனது வலைப்பூவை அறிமுகப்படுத்திருப்பது குறித்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி.
ReplyDelete