பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
தேவையான பொருள்கள் -
- சாளை மீன் - 8
- மாங்காய் துண்டுகள் - 4
- தக்காளி -1
- மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
- மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி
- சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
- மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
- மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
- புளி - கோலி அளவு
- உப்பு - தேவையான அளவு
- நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
- சின்ன வெங்காயம் - 4
- வெந்தயம் - 1/2 தேக்கரண்டி -
- கறிவேப்பிலை - சிறிது
- தக்காளியை பொடிதாகவும், வெங்காயத்தை நீளவாக்கிலும் நறுக்கி வைக்கவும். புளியை 200 மில்லி தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்..
- அரைக்க கொடுத்தவற்றை மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெந்தயம், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும், நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- தக்காளி சுருள வதங்கியதும் புளித்தண்ணீர், மாங்காய் துண்டுகள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.
- பிறகு மீன்களை சேர்த்து வேகும் வரை கொதிக்க விடவும்.
- மீன் நன்கு வெந்ததும் உப்பு சரி பார்த்து அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான சாளை மீன் குழம்பு ரெடி
No comments:
Post a Comment