பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
வறுத்து அரைக்க -
- மிளகாய் வத்தல் -3
- கொத்தமல்லி - 3 மேஜைக்கரண்டி
- சீரகம் - 1 தேக்கரண்டி
- மிளகு-1 தேக்கரண்டி
- தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிது
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு -1/2 தேக்கரண்டி
- உளுந்தம்பருப்பு -1/2 தேக்கரண்டி
- வெந்தயம் -1/2 தேக்கரண்டி
- வெங்காயம் -1/4
- கறிவேப்பிலை - சிறிது
- முதலில் மீனை சுத்தமாக கழுவி வைக்கவும். புளியை ஒரு கப் (200மில்லி) தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாயைமிதமான சூட்டில் வைத்து மிளகாய் வத்தல், கொத்தமல்லி, மிளகு எல்லாவற்றையும் சேர்த்து லேசாக வறுத்து அடுப்பை ஆப் பண்ணவும்.
- வறுத்த பொருள்களுடன் சீரகம், தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து கிளறி சிறிது நேரம் ஆற விடவும்.
- நன்றாக ஆறிய பின் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
- அதே கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து தாளித்து கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீரை ஊற்றவும்.
- புளித் தண்ணீர் கொதித்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு, மஞ்சள் தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
- மசாலா வாடை போனதும் மீன்களை சேர்த்து வேக விடவும். 5 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் பண்ணி விடவும்.
- சுவையான சாளை மீன் குழம்பு ரெடி.
Meen kuzhambu romba arumai. Saalai meen saapittadhe illai. Arumai.
ReplyDeletesavitha seythu sappidungal.allathu enga vettukku vanga.seythu tharukirane.
ReplyDelete