பரிமாறும் அளவு - 3 நபருக்கு
தேவையானபொருள்கள் -
- அரைக்கீரை - 4 கப்
- பச்சை மிளகாய் - 2
- சின்ன வெங்காயம் - 3
- பூண்டுப் பல் - 3
- தக்காளி - 1 (சிறியது)
- சோடா உப்பு - 1/2 தேக்கரண்டி
- தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிது
- கீரையை நன்றாக ஆய்ந்து தண்ணீரில் கழுவி சுத்தப்படுத்தி வைக்கவும். பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோலுரித்து சிறிதாக நறுக்கிக் வைக்கவும்.
- ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கீரை, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, தேங்காய் துருவல்,உப்பு, சோடா உப்பு எல்லாவற்றையும் போட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.
- கீரையில் தண்ணீர் சத்து இருப்பதால் தண்ணீர் சேர்க்கத் தேவை இல்லை. கை விடாமல் 2 நிமிடம் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
- ஆறிய பின் மிக்ஸ்சியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து கீரையோடு சேர்த்து நன்றாக கலக்கி விடவும். கீரை மசியல் ரெடி.
No comments:
Post a Comment