பரிமாறும்அளவு - 3 நபருக்கு
தேவையானபொருள்கள் -
தேவையானபொருள்கள் -
- முருங்கைக்காய் துண்டுகள் - 25
- மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
- சாம்பார் பொடி - 1/2 தேக்கரண்டி
- மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
- தேங்காய் துருவல் - 1 மேஜைக்கரண்டி
- உப்பு - தேவையானஅளவு
தாளிக்க -
- எண்ணெய் -3 மேஜைக்கரண்டி
- கடுகு -1 தேக்கரண்டி
- உளுந்தம்பருப்பு -1/2 தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் -3/4 பங்கு
- கறிவேப்பிலை - சிறிது
- வெங்காயத்தை பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் முருங்கை காய் முழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி உப்பும் சேர்த்து அடுப்பில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும். காய்கள் நன்றாக வெந்ததும் தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் மிளகாய்த் தூள், சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து 1 நிமிடம் கிளறி அவித்து வைத்துள்ள முருங்கைக்காய் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும்.
- உப்பு தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும். இறுதியில் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
- முருங்கைக்காய் பொரியல் ரெடி. சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்துடன் சேர்த்து பரிமாறலாம்.
No comments:
Post a Comment