பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- சாளை மீன்/ மத்தி மீன் - 10
- மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
- மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- எலுமிச்சை சாறு - 2 மேஜைக்கரண்டி
- எண்ணெய் - 100 மில்லி
- முதலில் மீனின் தலைப்பகுதி, வால் பகுதி இரண்டையும் வெட்டி நன்றாக கழுவி வைத்துக் கொள்ளவும்.
- மிளகாய் தூள், மஞ்சள்தூள், உப்பு மூன்றையும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் போல் வைத்துக் கொள்ளவும்.
- பேஸ்ட்டை எடுத்து மீனின் மீது நன்கு தடவி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வைத்து மீன்களை போடவும். சிறுது நேரம் கழித்து திருப்பி போட்டு வறுக்கவும். இரண்டு புறமும் நன்கு சிவந்ததும் எடுத்து விடவும்.
- மீதமுள்ள எல்லா மீன்களையும் இதே போல் வறுத்து எடுக்கவும். சுவையான சாளை மீன் வறுவல் ரெடி.
wow aunty.. I like this so much.. I'll definitely try this.. :) Hope u remember me :)
ReplyDelete