பரிமாறும் அளவு - 3 நபருக்கு
தேவையான பொருள்கள் -
தாளிக்க -
தேவையான பொருள்கள் -
தாளிக்க -
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
- மிளகாய் வத்தல் - 2
- காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
- கறிவேப்பிலை -சிறிது
- முதலில் கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- ஊறிய கடலைப்பருப்பு, தேவையான அளவு தண்ணீர், மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
- நீராவி அடங்கியதும் மூடியை திறந்து தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும்.உப்பு தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் மிளகாய் வத்தல், காயம், உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- பிறகு கடலைப்பருப்பு, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். கடலைப்பருப்பு சுண்டல் ரெடி.
Navaratri adhuvuma, orey sundal recipe pottu thaakkunga. super a irukku pa.
ReplyDeleteநன்றி சவிதா
Deleteசூப்பர்.எங்க வீட்டில் இந்த சுண்டலை பூம்பருப்பு என்று சொல்வோம்.எனக்கு மிகவும் பிடித்தமானது.நான் செய்திருக்கிறேன், இன்னும் போஸ்டிங் போடலை.
ReplyDeleteநன்றி. நாங்களும் இதை பூம்பருப்பு என்று தான் வீட்டில் சொல்லுவோம். நீங்கள் இதை செய்யும் முறையை உங்கள் வலைப் பதிவில் எதிர்பாக்கிறேன்.
Delete