Saturday, October 12, 2013

ஈசி தேங்காய் சாதம் / Coconut Rice

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. அரிசி - 150 கிராம் 
  2. தேங்காய் துருவல் - 100 கிராம் 
  3. உப்பு - தேவையான அளவு                         
     தாளிக்க -
  1. தேங்காய் எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி 
  5. முந்திரிப் பருப்பு - 6
  6. மிளகாய் வத்தல் - 2
  7. காயத்தூள் - 1/2 தேக்கரண்டி 
  8. கறிவேப்பிலை - சிறிது                                   
     செய்முறை -
  1. முதலில் அரிசியை கழுவி உப்பு மற்றும் 300 மில்லி தண்ணீர் சேர்த்து குக்கரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. அரை மணி நேரம் கழித்து குக்கரை அடுப்பில் வைக்கவும். நீராவி வந்ததும் வெயிட் போடவும். முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் பண்ணவும்.
  3. நீராவி அடங்கியதும் மூடியை திறந்து சாதத்தை எடுத்து தட்டில் பரப்பி 10 நிமிடம் ஆற விடவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தல், கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு போட்டு தாளிக்கவும்.
  5. கடுகு வெடித்தவுடன் காயத்தூள், கறிவேப்பிலை, முந்திரிப் பருப்பு, தேங்காய் துருவல் சேர்த்து வறுக்கவும்.                                                    
  6. தேங்காய் துருவல் சிவந்து வரும் போது சாதத்தை போட்டு நன்றாக கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். உப்பு தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும். சுவையான தேங்காய் சாதம் ரெடி.                                                   

2 comments:

  1. சூப்பர் தேங்காய் சாதம் சகோதரி...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...