Wednesday, October 16, 2013

இடியாப்பம் / Idiyappam - 100 வது பதிவு

இது என்னுடைய 100 வது பதிவு. எனக்கு தொடர்ந்து ஆதரவு தரும் எல்லாருக்கும் நன்றி.

                                   
பரிமாறும் அளவு  - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. இட்லி அரிசி - 200 கிராம்
  2. உப்பு - தேவையான அளவு
  3. நல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
  செய்முறை -
  1. அரிசியை கழுவி 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். ஊறிய பிறகு தண்ணீரை வடித்து விட்டு கிரைண்டரில் உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.          
  2. அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து அரைத்து வைத்துள்ள மாவை போட்டு 2 நிமிடம் வதக்கி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
  3. வதக்கிய மாவை இடியாப்ப அச்சில் போட்டு வட்டமாக இடியப்பா தட்டில் பிழியவும். 
  4. மீதமுள்ள மாவையும் பிழிந்து  இடியாப்ப ஸ்டாண்டில் மாட்டவும்.             
  5. இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். பிறகு இடியாப்ப ஸ்டாண்டை உள்ளே வைத்து 10 நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும். இடியப்பா ஸ்டாண்ட் இல்லாவிட்டால் இட்லி தட்டில் பிழிந்தும் செய்யலாம்.                                                  
  6. சுவையான இடியாப்பம் ரெடி. இடியாப்பத்தை தேங்காய் பால் அல்லது குருமாவுடன் பரிமாறலாம்.

7 comments:

  1. Idiyappam looks so fluffy. Hearty congratulations for your 100 th post.

    ReplyDelete
  2. சவிதா உங்கள் கருத்துக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  3. கருத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  4. Congratulations ..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...