Monday, May 18, 2015

வெங்காய வடகம் / Onion Vadagam

இப்போது கொளுத்தும் வெயில் ஆரம்பம் ஆகி விட்டது. வெங்காய வடகம் செய்வதற்கு ஏற்ற காலம். ஒரு வருடத்திற்கு தேவையான வடகம் செய்து வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளலாம். இனி சின்ன வெங்காயத்தை வைத்து வடகம் எப்படி செய்வதென்று பார்ப்போமா !

தேவையான பொருள்கள் -
  1. சின்ன வெங்காயம் - 2 கிலோ 
  2. வெள்ளை முழு உளுந்து - 200 கிராம் 
  3. காயப்பொடி - 1 தேக்கரண்டி 
  4. கடுகு - 1 மேஜைக்கரண்டி  
  5. மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
  6. வெந்தயப்பொடி - 2 தேக்கரண்டி 
  7. உப்பு - தேவையான அளவு 
  8. மல்லித்தழை - 1 கட்டு 
  9. கறிவேப்பிலை - ஒரு சிறிய கப் அளவு 
கரகரப்பாக அரைக்க -
  1. மிளகாய் வத்தல் - 10
  2. சீரகம் - 2 மேஜைக்கரண்டி 
  3. பூண்டு - 1 பெரியது 

செய்முறை -
  1. 2 கிலோ வெங்காயத்தை தோலுரித்து பொடிதாக நறுக்கி ஒரு பேப்பரில் பரப்பி நான்கு மணி நேரம் உலர விடவும்.                                                                     
  2. உளுந்தம் பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும். 
  3. மல்லித்தழை, கறிவேப்பிலை இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். பூண்டை தோலுரித்து வைக்கவும்.
  4. மிளகாய் வத்தல், சீரகம், பூண்டு மூன்றையும் மிக்ஸ்சியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.                                                                                                                                        
  5. பருப்பை நன்றாக  கழுவி தண்ணீரை வடித்து விட்டு அதனுடன் உப்பு சேர்த்து கிரைண்டரில் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். இட்லி பதத்திற்கு அரைக்க தேவை இல்லை. 10 நிமிடம் அரைத்தால் போதும்.                         
  6. பிறகு அதனுடன் நறுக்கிய வெங்காயம், கடுகு, காயப்பொடி, மஞ்சள்பொடி, வெந்தயப்பொடி, மல்லித்தழை, கறிவேப்பிலை எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.                   
  7. பிறகு கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு வெங்காய கலவையை உருட்டாமல் சிறிது சிறிதாக எடுத்து தட்டுகளில் வைத்து வெயிலில் காய வைக்கவும். உருட்டி வைத்தால் வறுக்கும் போது சரியாக வேகாது. 
                                                                                            
                                                                                                                          
  8. அடுத்த நாள் வடகம் தட்டோடு ஒட்டி இருக்கும். எனவே ஒரு சிறிய மேஜைக்கரண்டி கொண்டு எடுத்து ஒரு பேப்பரில் பரப்பி வெயிலில் காய வைக்கவும்.                                                   
  9. இரண்டு நாட்களில் வடகம் நன்கு காய்ந்து விடும்.                         
  10. பிறகு ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். தேவையான போது வறுத்து கொள்ளலாம்.
இனி வெங்காய வடகத்தை எப்படி வறுப்பது என்ற ஒரு சிறிய பதிவு -

தேவையான பொருள்கள் -
  1. வெங்காய வடகம் - 8
  2. பொரிப்பதற்கு எண்ணெய் - தேவையான அளவு 
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வடகங்களை போடவும். பிறகு திருப்பி போடவும்.                       

                  
  2. இரு புறமும் வெந்ததும் எடுத்து ஒரு டிஸ்யு பேப்பரில் வைக்கவும். எண்ணெய் உறிஞ்சியவுடன் எடுத்து சாப்பிடலாம்.                                                            

                                                                                                             
  3. சாம்பார் சாதம், தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். வடக குழம்பும் வைக்கலாம். வடகத் துவையலும் அரைக்கலாம்.

29 comments:

  1. படங்களுடன் விளக்கம் அற்புதம்...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு மிக்க நன்றி தனபாலன் சார்.

      Delete
  2. பசுமையான மலரும் நினைவுகள்..

    கால சூழ்நிலைகள் சரியாக இருக்கும் காலத்தில் எங்கள் வீட்டில் வெங்காய வற்றல் செய்வதுண்டு..

    இப்போது இவ்வளவு தூரம் யார் முயற்சி எடுத்துக் கொள்கின்றார்கள்!?..

    ஆயினும் - பயனுள்ள குறிப்பு.. வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொன்ன மாதிரி யார் இவ்வளவு முயற்சி செய்கிறார்கள் ? கொஞ்சம் முயற்சி செய்தால் நல்ல சுவையாக சாப்பிடலாம்.

      Delete
  3. அம்மா இவையெல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும், ஆனால் செய்ய தெரியாது. இப்பவெல்லாம் தங்கள் குறிப்பு பார்த்து செய்துக்கொள்கிறேன். அதற்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. எளிய செயல்முறை விளக்கம். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. எனது குறிப்பை பார்த்து நீங்கள் செய்வது குறித்து மிக்க மகிழ்ச்சி மகேஸ்வரி.

      Delete
  4. ஆ.ஹா. அருமையான வெங்காய வடகம். பார்க்கவே நல்லாயிருக்கு. படங்கள், விளக்கம் அருமை. கொஞ்சம் மெனக்கெடல் தேவை. வெங்காயம் உரிக்கனுமே அதுதான் அக்கா. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் குறைவான அளவில் செய்து பாருங்கள் பிரியசகி.

      Delete
  5. அட நான் இது வரை கேள்விப் படவே இல்லையே ம்..ம். என்னமா சமைக் கிறீங்கப்பா இப்படி பொறாமைப் பட வைக்கிறீர்களே என்னை. ம்ம்..ம் ரொம்பவே அழவேண்டி இருக்கும் போலிருக்கே ம்..ம் ஒரு ஐடியா அப்போ ஆத்துக்காரரை அழவைப்போமா எப்பவும் பொம்மனாட்டிகள் தான் அழனுமா என்ன இல்லையா தோழி. ஹா ஹா ...பதிவுக்கு நன்றிம்மா ...!

    ReplyDelete
    Replies
    1. ஒருத்தரும் அழ வேண்டாம். வெங்காயத்தை தண்ணீரில் நனைத்து நறுக்கினால் அழ வேண்டிய நிலைமை வராது. குறைந்த அளவில் செய்து பாருங்கள் இனியா.

      Delete
  6. இதை நாங்கள் கறிவடகம் என் போம். ஆஹா...வெயில் காலம் வந்தால் எங்க அம்மா விடமாட்டாங்க...எப்ப பையனுக்கு லீவு வரும்...என...உடனே வா வா என்பார்கள். அனைத்து வற்றலையும் போட....இதுல காக்கா விரட்ட வேற உட்கார்ந்து கொள்ள வேண்டும். பக்கத்துல பெரிய கம்பு வேற வைத்துக் கொண்டு. காக்காவ பயமுறுத்த.... ஆனாலும் காக்கா அப்படி இப்படின்னு...நம்மளை டிரில் வாங்கி விடும்....மலரும் நினைவுகளைக் கொடுக்கிரது தங்கள் பதிவு நன்றி சகோ...

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது போல தான் எங்கள் வீட்டிலும் நடுக்கும். ஆனால் நல்ல ஜாலி யாக இருக்கும். நீங்கள் சொன்னவுடன் எனக்கும் மலரும் நினைவுகள் வந்து போகிறது.

      Delete
  7. வெங்காய வடாம் .... படமும் செய்முறை விளக்கங்களும் மிக அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தொடர் வருகை தந்து என்னுடைய பதிவை பார்த்து ஊக்குவிப்பதற்கு மிக்க நன்றி சார்.

      Delete
  8. எல்லா வடகமுமே நான் இஷ்டப்பட்டு சாப்பிடுவேன் அருமை.

    ReplyDelete
    Replies
    1. எல்லா வடகமும் உங்களுக்கு பிடிக்கும் என்பதை தெரிந்து கொண்டேன் சகோ.

      Delete
  9. இதுவரை ருசித்ததில்லை. தற்போது தங்களின் பதிவு மூலமாக ருசித்தேன்.

    ReplyDelete
  10. வடகம் செய்முறை அருமை! ஒரு சந்தேகம். வடகம் காய்ந்த பின் எதனால் சிவப்பாக இருக்கிறது? வற்றல் மிள‌காய் அரைத்துப்போட்டதாலா? அதனால்தான் எண்ணெயில் வறுத்தெடுக்கும்போது இன்னும் ஆழ்ந்த சிவப்பாக, பிரவுன் கலராக இருக்கிறதா?

    அடுத்த மாதம் ஊருக்கு வருகிறேன். அவசியம் செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அக்கா நீங்க சொன்ன மாதிரி தான் மிளகாய் வத்தல், வெங்காயம் உளுந்தம்பருப்பு கலவையினால் தான் சிவந்த நிறமாக மாறுகிறது.

      Delete
  11. வணக்கம் சகோதரி!
    இந்தியாவுக்கு வரும்போதெல்லாம்,
    இங்கு எடுத்துவரும் பொருட்களுள் கண்டிப்பாக வடகம் இடம் பெறும்.
    எனது அக்கா எங்களுக்காக கோடை விடுமுறையின் போதே போட்டு வைத்து இருந்து கொடுப்பார். இனி தங்களது பதிவின் படி செய்யும்படி அவர்களுக்கு தெரிவித்து உள்ளேன் சகோ!
    "வெங்காய வடகம் " எப்படி என்பதன் தீர்ப்பினை நிச்சயம் பிறகு தருவேன் அனுபவபூர்வமாக !
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  12. வாங்க சகோ என்னுடைய பதிவின் படி அக்காவிடம் செய்ய சொல்லி பிறகு தீர்ப்பும் சொல்வதாக சொல்லி இருக்கீங்க. தீர்ப்பு நல்லதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  13. வெங்காயதை தினமும் சாப்பிட்டால் டி பி. குறையும். வெங்காயம்,பித்தம் குறைய,பெல்லாரி வெங்காயம்

    ReplyDelete
  14. கருத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  15. வடகம் அருமை. நாங்களும் இப்படி செய்வோம்.

    ReplyDelete
  16. காயப்பொடி என்றால் என்ன ?…

    ReplyDelete
  17. காய்பொடி என்றால் பெருங்காயத்தை தூள் பண்ணி வைத்திருப்பது எல்லா கடைகளிலும் கிடைக்கும்.

    ReplyDelete
  18. செய்முறை விளக்கம் அருமை. அதிகபட்சம் எவ்வளவு நாட்கள் வைத்து உபயோகிக்கலாம்.

    ReplyDelete
  19. ஒரு வருடம் வரை வைத்து உபயோகிக்கலாம்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...