Friday, April 26, 2013

பருப்பு வடை

பரிமாறும் அளவு - 4 நபருக்கு

தேவையானபொருள்கள் -
  1. பட்டாணிப் பருப்பு - 100 கிராம்
  2. கடலைப் பருப்பு - 100 கிராம்
  3. துவரம் பருப்பு - 100 கிராம்
  4. பச்சை மிளகாய் - 3
  5. பெரிய வெங்காயம் - 1
  6. சோம்பு - 1/2 தேக்கரண்டி
  7. கறிவேப்பிலை - சிறிது
  8. உப்பு - தேவையானஅளவு
  9. காயம் - 1/4 தேக்கரண்டி
  10. எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை -
  1. மூன்று பருப்புகளையும் ஒன்றாக சேர்த்து தண்ணீரில் 4 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பின் நன்றாக கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்துக் கொள்ளவும். நான்கு மேஜைக்கரண்டி பருப்பை தனியே எடுத்து வைக்கவும்.
  2. வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை எல்லாவற்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  3. ஊற வைத்த பருப்பு, காயம், சோம்பு, உப்பு சேர்த்து கிரைண்டர் அல்லது மிக்ஸ்சியில் போட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  4. அரைத்த பருப்போடு தனியாக எடுத்து வைத்த பருப்பு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக பிசைந்து வைத்து கொள்ளவும்.
  5. எலுமிச்சை அளவு மாவை கையில் எடுத்து வடைகளாக தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும். 
  6. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் 3 அல்லது 4 வடைகளை போட்டு மிதமான சூட்டில் வைத்து பொன்னிறமாக சுட்டு எடுக்கவும். மீதமுள்ள மாவையும் அவ்வாறே சுட்டு எடுக்கவும்.
  7. சுவையான முப்பருப்பு வடை ரெடி. வடைகளை ஒரு டிஸ்யூ பேப்பரில் 15 நிமிடம் வைத்து பின் காபி/ டீயுடன் பரிமாறலாம். 15 வடைகள் வரை வரும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...