Tuesday, January 28, 2014

உளுந்தங்களி / Ulunthu Kali


 தேவையான பொருள்கள் -
  1. கருப்பட்டி - 200 கிராம் 
  2. பச்சரிசி - 100 கிராம் 
  3. தோல் உளுந்து - 100 கிராம் 
  4. நெய் - 3 மேஜைக்கரண்டி
  5. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி                                                  
செய்முறை -
  1. பச்சரிசி, தோல் உளுந்து இரண்டையும் வெயிலில் ஒரு மணி நேரம் காய வைத்து மிக்ஸ்சியில் திரித்துக் கொள்ளவும். வெயில் இல்லாவிட்டால் அடுப்பில் கடாயை வைத்து பச்சரிசி, உளுந்து இரண்டையும் போட்டு லேசாக வறுத்து திரித்துக் கொள்ளவும்.
  2. கருப்பட்டியை பொடித்துக் கொள்ளவும். 
          
  3. அடுப்பில் அடிக்கனமான பாத்திரத்தை வைத்து 50 மில்லி தண்ணீர் ஊற்றி  பொடித்து வைத்துள்ள கருப்பட்டியை போட்டு  150 மில்லி அளவுக்கு பாகு காய்ச்சவும். அடுப்பை சிம்மில் வைத்து பாகு காய்ச்சவும்.                                           
  4. கருப்பட்டி பாகை வடிகட்டியில் ஊற்றி வடித்துக் கொள்ளவும்.
  5. அடுப்பில் கடாயை வைத்து வடி கட்டிய கருப்பட்டி பாகு மற்றும் பாதி அளவு நெய் சேர்த்து கொதிக்க விடவும். 
  6. கொதிக்க ஆரம்பித்ததும் களி மாவை ஒரு குழம்பு கரண்டி வீதம் எடுத்து பாகின் மேல் தூவி கை விடாமல் கிளற வேண்டும்.                         
  7. இவ்வாறு மீதமுள்ள மாவையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கை விடாமல் கிளற வேண்டும். 
  8. கெட்டியாக மாவு சுருண்டு வரும் போது மீதமுள்ள நெய், நல்லெண்ணெய் ஊற்றி கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.                                      
  9. கையில் லேசாக எண்ணையை தொட்டுக் கொண்டு மாவு சிறிது சூடாக இருக்கும் போதே உருண்டைகளாக பிடிக்கவும். இந்த அளவுக்கு 16 களி உருண்டைகள் வரும். சுவையான உளுந்தங்களி ரெடி.                                                          
குறிப்புக்கள் -
  1. பச்சரிசி, தோல் உளுந்து இரண்டையும் சம அளவு எடுத்து மிசினில் திரித்து ஏர் டைட் பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளலாம். தேவையான பொழுது உபயோகபடுத்திக் கொள்ளலாம்.
  2. தோல் உளுந்துக்கு பதிலாக வெள்ளை முழு உளுந்தும் உபயோகிக்கலாம்.
  3. உளுந்தங்களி பெண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

6 comments:

  1. அக்கா,கலையிலேயே இப்படி நாவூற வைத்துவிட்டீர்களே! சூப்பர்.

    ReplyDelete
  2. முதன்முதலாக செய்வோர் கவனத்திற்கு! கருப்பட்டி பாகில் மாவை தூவும் போது கவனமாக இருக்க வேண்டும். சிறிது சிறிதாக மாவை தூவியபடியே கிண்டிக்கொண்டே இருக்கவேண்டும் இல்லையேல் மாவு சரியாய் கரையாமல் கெட்டிகெட்டியாக உருண்டு கொள்ளும்.

    ReplyDelete
  3. முதல் வருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  4. Thank u madam, i am searching this receipe past many years. I am very happy to got this.

    ReplyDelete
  5. சுவைத்துப்பார்க்கத் தூண்டுகிறது.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...