தேவையான பொருள்கள் -
- பாஸ்மதி அரிசி - 150 கிராம்
- தக்காளி - 2
- பச்சை மிளகாய் - 3
- பெரிய வெங்காயம் - 1
- உப்பு - தேவையான அளவு
- மல்லித் தழை - ஒரு கைப்பிடி
- புதினா - ஒரு கைப்பிடி
- நெய் - 2 மேஜைக்கரண்டி
- எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
தேங்காய் பால் எடுக்க -
செய்முறை -
- தக்காளியை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
- இஞ்சி, பூண்டு, இரண்டையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
- தேங்காய் துருவலுடன் தண்ணீர் சேர்த்து மிக்ஸ்சியில் அரைத்து 300 மில்லி அளவுக்கு பால் எடுத்து வைக்கவும்.
- பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி உப்பு சேர்த்து தேங்காய் பாலில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்கு வதக்கவும்.
- பச்சை வாடை போனதும் தக்காளியை சேர்த்து நன்கு சுருள வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் மல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கவும்.
- நன்றாக வதங்கியதும் தேங்காய்பாலில் ஊற வைத்த அரிசியை சேர்த்து நன்றாக கலக்கி மூடி வைக்கவும்.
- நீராவி வந்ததும் வெயிட் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து 15 நிமிடங்கள் கழித்து அடுப்பை ஆப் பண்ணி விடவும். விசில் வர தேவை இல்லை.
- நீராவி அடங்கியதும் குக்கரை திறந்து சாதத்தை லேசாக கிளறி பாத்திரத்திற்கு மாற்றி விடவும். சுவையான தக்காளி சாதம் ரெடி.
இதற்கு பச்சமிளகாய் மட்டும் தானா மிளகாய் தூள்வேண்டாமா?
ReplyDeleteதனி பச்சை மிளகாய் வைத்தும் செய்யலாம் ஜலீலா.
Deleteபச்சை மிளகாயே நல்லா இருக்குதுங்க
ReplyDeleteமுதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தொடர்ந்து வந்து கருத்துக்களை சொல்லுங்கள்.
ReplyDeleteபாசுமதி அரிசிதான் யூஸ் பண்ண வேண்டுமா? அல்லது எந்த அறி வேண்டுமென்றாலும் யூஸ் பண்ணலாமா?
ReplyDeleteஎந்த அரிசியிலும் தக்காளி சாதம் பண்ணலாம். பாஸ்மதி அரிசியில் வைத்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும். வருகைக்கு நன்றி.
ReplyDeleteதக்காளி சாதம் மிகவும் எளிய முறையில் செய்வது எப்படி என்று வியாக்கியதர்க்கு நன்றி தோழி.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteதேங்காய் பால் கண்டிப்பாக சேர்க்கணுமா
ReplyDeleteதேங்காய் பால் கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்று இல்லை. தேங்காய் பாலுக்கு பதில் தண்ணீர் சேர்த்தும் செய்யலாம், தேங்காய் பால் சேர்த்து செய்தால் சுவை நன்றாக இருக்கும்.
ReplyDeleteThanks romba super aa vanthuchu
ReplyDeleteSethu parthu karuthu sonnatharku Thanks.
ReplyDeleteமிக நன்றாக இருந்தது நன்றி
ReplyDeleteSethu parthu karuthu sonnatharku Thanks.
ReplyDeleteGood work. Keep going with this type of delicious mouthwatering dishes
ReplyDeleteThank you for this recipe. Bachelors ku useful aana one pot recipe. Neenga Intha recipe 150g rice ku use seithu irukara tomatoes onions ginger and garlic gram measures thaanga please.
ReplyDeleteBeginner and very new to cooking. Your reply will be very useful while trying this recipe I will try and share my feedback Expecting your reply eagerly Thank you
Karthick
தக்காளி சாதம் மிகவும் எளிய முறையில் செய்வது எப்படி என்று வியாக்கியதர்க்கு நன்றி
ReplyDelete
ReplyDeleteபெருமாள் கோவில் புளியோதரை ருசியாக இருக்கும். உங்களுக்கு அந்த புளியோதரையை வீட்டில் செய்து சாப்பிட