Tuesday, January 28, 2014

சௌசௌ பட்டர் பீன்ஸ் கூட்டு / Chayote butterbeans kootu


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. சௌசௌ - 1
  2. ப்ரெஷ் பட்டர் பீன்ஸ் - 100 கிராம் 
  3. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
  4. மல்லித்தூள் - 1 மேஜைக்கரண்டி 
  5. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி 
  6. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  7. தக்காளி -1
  8. உப்பு - தேவையான அளவு                                                    
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி                                
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. வெங்காயம் - 1/4 பங்கு 
  5. கறிவேப்பிலை - சிறிது                              
செய்முறை -
  1. குக்கரில் பட்டர்பீன்ஸ் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். நீராவி வந்ததும் வெயிட் போடவும். முதல் விசில் வந்தவுடன் அடுப்பை ஆப் பண்ணி விடவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து தண்ணீரை வடித்து சிறிது நேரம் ஆற விடவும்.
  2. ஆறிய பின் நீளவாக்கில் வெட்டி வைத்துக் கொள்ளவும். சௌசௌயையும் தோலுரித்து சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.                 
  3. வெங்காயம், தக்காளி இரண்டையும் வெட்டி வைக்கவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து சுருள வதக்கி சௌசௌவை சேர்த்து ஒரு கை தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
  6. சௌசௌ வெந்தவுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து கிளறவும்.
  7. ஒரு நிமிடம் கழித்து பட்டர்பீன்ஸ் மற்றும் 100 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  8. மசாலா வாடை போனதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்க்கவும்.
  9. கூட்டு கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான சௌசௌ பட்டர் பீன்ஸ் கூட்டு ரெடி.                                          

1 comment:

  1. ஆஹா ! சவ் சவ் பட்டர் பீன்ஸ் கூட்டு இப்பத்தான் கேள்விபடுறேன்.அருமையாக இருக்கு.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...