தேவையான பொருள்கள் -
- தண்டுக்கீரை - 1 கட்டு
- தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
- வேக வைத்த துவரம் பருப்பு - 2 மேஜைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 1
- கறிவேப்பிலை - சிறிது
- கீரையை நன்றாக கழுவி தண்ணீரை நன்கு வடித்து விட்டு பொடிதாக நறுக்கி வைக்கவும்.
- வெங்காயத்தை பொடிதாகவும், பச்சை மிளகாயை நீளவாக்கிலும் வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள கீரையுடன் உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கீரை வேகும் வரை நன்றாக கிளறவும். 2 அல்லது 3 நிமிடங்களில் கீரை வெந்துவிடும்.
- கீரை வெந்ததும் அவித்து வைத்துள்ள பருப்பு,தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
- சுவையான தண்டுக்கீரை பொரியல் ரெடி.
அக்கா தண்டுக்கீரை பொரியல் சூப்பரோ சூப்பர்.
ReplyDeleteகீரைப்பொரியல் மிக அருமை...
ReplyDeleteஆஹா என்ன அருமையான கீரை பொறியல் செஞ்சு சாப்பிட்டாச்சுங்கோ....
ReplyDelete