பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- உருளைக்கிழங்கு - 2
- காய்ந்த பட்டாணி - 50 கிராம்
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- சாம்பார் பொடி - 1/2 மேஜைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
- வெங்காயம் - 1/4 பங்கு
- கறிவேப்பிலை - சிறிது
- தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
- பொட்டுக் கடலை - 1 மேஜைக்கரண்டி
- முந்திரிப் பருப்பு - 2
- பச்சை மிளகாய் -1
- இஞ்சி - 1 இன்ச் அளவு
- பூண்டுப் பல் -2
- தக்காளி - 1
- பட்டாணியை 4 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
- குக்கரில் தோலுரித்த உருளைக்கிழங்கு, பட்டாணி இரண்டும் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி மூடி அடுப்பில் வைக்கவும். நீராவி வந்ததும் வெயிட் போடவும். ஒரு விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் பண்ணவும்.
- நீராவி அடங்கியதும் மூடியை திறந்து தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும்.
- தேங்காய் துருவல், பொட்டுக்கடலை, முந்திரிப்பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, தக்காளி எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
- உருளைக்கிழங்கை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். பட்டாணியை தனியே எடுத்து வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் உருளைக்கிழங்கு, பட்டாணி, மஞ்சள் தூள், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறி 200 மில்லி தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்த கலவையை சேர்த்து குருமா கெட்டியாகும் வரை அடுப்பில் வைத்திருக்கவும்.
- குருமா கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். சுவையான உருளைக்கிழங்கு பட்டாணி குருமா ரெடி.
செய்து பார்க்கிறேன் அக்கா. பார்க்கவே அருமை.
ReplyDeleteகண்டிப்பாக செய்து பாருங்கள் ஆசியா !
ReplyDelete