தேவையான பொருள்கள் -
- காலிப்ளவர் - 1 சிறியது
- பச்சை பட்டாணி - 50 கிராம்
- தக்காளி - 1
- மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி
- சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
- மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- மல்லித்தழை - சிறிது
- பட்டை - 1 இன்ச் அளவு
- கிராம்பு - 2
- சோம்பு - 1 தேக்கரண்டி
அரைக்க -
- பச்சை பட்டாணியை 4 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் 2 விசில் வரும் வரை வைத்து வேக வைத்து தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
- முதலில் 300 மில்லி வெந்நீரில் முழு காலி பிளவரை போட்டு 5 நிமிடம் மூடி வைக்கவும். 5 நிமிடம் கழித்து காலிபிளவரை எடுத்து பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
- தக்காளியை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.
- கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு மூன்றையும் பொன்னிறமாக வறுத்து மிக்ஸ்சியில் பொடித்துக் கொள்ளவும். தேங்காயையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். பிறகு கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் பட்டை கிராம்பு பொடி, வெட்டி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
- நன்கு சுருள வதங்கியதும் காலிபிளவருடன் ஒரு கை தண்ணீர் தெளித்து வேகும் வரை நன்கு வதக்கவும்.
- காலிபிளவர் நன்கு வெந்ததும் வேக வைத்துள்ள பட்டாணி, மிளகாய் தூள், சீரகத்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து 1 நிமிடம் கிளறி 200 மில்லி தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.
- மசாலா வாடை அடங்கி வரும் போது அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கிரேவி கெட்டியானதும் மல்லித் தழையை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
- சுவையான காலி பிளவர் பட்டாணி குருமா ரெடி.
No comments:
Post a Comment