பரிமாறும் அளவு - 3 நபருக்கு
தேவையானபொருள்கள் -
- வெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம்
- மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
- மல்லித்தூள் - 3 மேஜைக்கரண்டி
- சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 தேக்கரண்டி
- உப்பு - தேவையானஅளவு
- தேங்காய் துருவல் - 1 கப் (200 கிராம்)
தாளிக்க -
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- பட்டை - 1/2 இன்ச் நீளம்
- கிராம்பு -1
- வெங்காயம் - 1/4 பங்கு
- கறிவேப்பிலை - சிறிது
- கொண்டக்கடலையை தண்ணீரில் 6 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
- வெங்காயத்தை பொடிதாக நறுக்கி வைக்கவும். தக்காளி, மல்லித்தழை இரண்டையும் மிக்ஸ்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
- தேங்காய் துருவலுடன் 50 மில்லி தண்ணீர் சேர்த்து அரைத்து கெட்டியாக தேங்காய் பால் எடுத்து தனியாக வைக்கவும்.
- அடுத்தது அதே தேங்காயுடன் 300 மில்லி தண்ணீர் சேர்த்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் இரண்டாவதாக எடுத்த தேங்காய் பால், அவித்து வைத்துள்ள சென்னா, மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், அரைத்து வைத்துள்ள தக்காளி கலவை, இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு எல்லாவற்றையும் போட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
- மசாலாவாடை போனதும் முதல் தேங்காய்பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு, வெங்காயம் போட்டு தாளிக்கவும்.
- தாளித்ததை குழம்பில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். சுவையான சென்னா தேங்காய்ப்பால் குழம்பு ரெடி.
குழம்பு அசத்தலாக இருக்கு அக்கா.
ReplyDeleteமிக்க நன்றி ஆசியா!
ReplyDeleteசூப்பர் பெம்மா! குழம்பு நன்றாக வந்தது. மிகவும் எளிமையாக இருந்தது.
ReplyDeletearumai akka
ReplyDeleteveku natkalukku piraku vanthu karuthu sonnatharkku nantri sangeetha !
ReplyDelete