Tuesday, January 21, 2014

இடியாப்ப பிரியாணி / Idiyappa Briyani

                             
பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. உதிர்த்த இடியாப்பம் - 2 கப் ( 400 கிராம் ) (இடியாப்பம் ரெசிபிக்கு இங்கே கிளிக் செய்யவும்)
  2. தக்காளி - 1
  3. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
  4. கரம் மசாலா - 1 தேக்கரண்டி 
  5. பிரியாணி மசாலா - 1 தேக்கரண்டி 
  6. இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி 
  7. உப்பு - 1/2 தேக்கரண்டி                                                     
தாளிக்க -
  1. எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி 
  2. நெய் - 2 மேஜைக்கரண்டி 
  3. பட்டை - 1 இன்ச் அளவு 
  4. கிராம்பு - 2
  5. பெரிய வெங்காயம் - 2
  6. கறிவேப்பிலை - சிறிது                                             
செய்முறை -
  1. வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை பொடிதாகவும் நறுக்கிக் கொள்ளவும்.
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும்.
  3. தாளித்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து சுருள வதக்கவும். தக்காளி சுருண்டு வரும் போது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.                                                          
  4. பச்சை வாடை போனதும் உதிர்த்து வைத்துள்ள இடியாப்பத்துடன் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, பிரியாணி மசாலா சேர்த்து 2 நிமிடம் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
  5. சுவையான இடியாப்ப பிரியாணி ரெடி.               

1 comment:

  1. ப்லைன் இடியாப்ப பிரியாணி சூப்பர்கா,

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...