தேவையான பொருள்கள் -
- புதினா - 200 கிராம்
- கொத்தமல்லித் தழை - 200 கிராம்
- கடலைப் பருப்பு - 2 மேஜைக்கரண்டி
- தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி
- புளி - பாக்கு அளவு
- மிளகாய் வத்தல் - 2
- பூண்டு பல் - 2
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிது
- புதினா, கொத்தமல்லி இரண்டையும் நன்கு ஆய்ந்து தண்ணீரில் நன்கு கழுவிக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து சூடானவுடன் புதினா, கொத்தமல்லியை சேர்த்து லேசாக வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.
- அதே கடாயில் கடலைப் பருப்பு, தேங்காய் துருவல் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து சிறிது நேரம் ஆற விடவும்.
- ஆறிய பின் புதினா, கொத்தமல்லி, கடலைப் பருப்பு, தேங்காய் துருவல், புளி, மிளகாய் வத்தல், பூண்டு பல், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸ்சியில் கெட்டியாக அரைத்து எடுக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து சட்னியில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். சுவையான புதினா கொத்தமல்லி சட்னி ரெடி.
கடலை பருப்பு சேர்ப்பது புதுசாக இருக்கு.டேஸ் சூப்பராகத்தான் இருக்கும்,உங்க முறையில் செய்து பார்க்கிறேன்.
ReplyDeleteநாங்கள் உளுத்தம்பருப்பு போடுவோம். பூண்டு சேர்க்க மாட்டோம். இம்முறையில் ஒருமுறை செய்து பார்க்கிறோம்.
ReplyDelete