பரிமாறும் அளவு - 3 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- உருளைக்கிழங்கு - 1/4 கிலோ
- மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- சீரகத்தூள் - 1 மேஜைக்கரண்டி
- உப்பு - தேவையானஅளவு
தாளிக்க -
- எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
- கடுகு -1 தேக்கரண்டி
- உளுந்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் -1
- கறிவேப்பிலை - சிறிது
செய்முறை -
- குக்கரில் உருளைக்கிழங்கு மற்றும் அது முழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து தண்ணீரை வடித்து சிறிது நேரம் ஆற விடவும்.
- நன்றாக ஆறியதும் கிழங்குகளை தோலுரித்து சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். வெங்காயத்தை பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து 1 நிமிடம் கிளறவும்.
- அதன் பின் வெட்டி வைத்துள்ள கிழங்கு துண்டுகளை போட்டு 2 நிமிடம் நன்றாக கிளறவும்.
- இறுதியில் சீரகத்தூள் போட்டு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான வறுவல் ரெடி. சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்துடன் பரிமாறலாம் .
Super Akka.
ReplyDeleteஆசியாவின் கருத்துக்கு நன்றி.
ReplyDelete