Friday, January 10, 2014

அதிரசம் / Athirasam

தேவையான பொருட்கள் -
  1. பச்சரிசி - 1 கப்  
  2. வெல்லம் - 3/4 கப்
  3. ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
  4. எண்ணெய் - பொரிப்பதற்கு  தேவையான அளவு
செய்முறை -
  1. பச்சரிசியை கழுவி தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் தண்ணீரை நன்கு வடித்து விட்டு ஒரு துணியில் 20 நிமிடம் நிழலில் காய விடவும்.
  2. பிறகு அந்த அரிசி லேசாக ஈர பதமாக இருக்கும் போதே மிக்சியில் நன்றாக பொடித்துக் கொள்ளவும். கொஞ்சம் கொஞ்சமாக அரைத்தால் நன்றாக பொடியாகும்.
  3. பொடித்த மாவை சல்லடையில் வைத்து சலித்துக் கொள்ளவும். அதோடு ஏலக்காய் பொடியை சேர்க்கவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து பொடித்த வெல்லத்தை போடவும். அதனுடன் சிறதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டவும். மீண்டும் வடிகட்டிய பாகை காய்ச்சவும். தீயை மிதமாக வைத்துக் கொள்ளவும்.
  5. உருட்டு பதம் வர வரைக்கும் பாகை காய்ச்ச வேண்டும். பாகு பதம் தான் அதிரசம் செய்வதற்கு முக்கியமான ஒன்று. பதம் சரியாக வரவில்லை என்றால் எண்ணெயில் பொரிக்கும் பொது மாவு பிரிந்து போய் விடும் அல்லது அதிரசம் மிகவும் கடினமாக ஆகிவிடும்.
  6. பதத்தை தெரிந்து கொள்வதற்கு ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும். வெல்லம் நன்றாக கொதித்ததும் சிறிது எடுத்து பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். பாகு எப்போது தண்ணீரில் கரையாமல் மெதுவான பந்து போல உருட்ட முடிகிறதோ அது தான் உருட்டு பதம். அந்த பதம் வரும்வரை பாகை தண்ணீரில் ஊற்றி அவ்வபோது பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
  7. உருட்டு பதம் வருவதற்கே முன்னரே அடுப்பை அணைத்து விட்டால் அதிரசம் பிரிந்து போய் விடும். அல்லது அந்த பதத்தை தாண்டி விட்டால் அதிரசம் கடினமாகி விடும்.
  8. உருட்டு பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு பாகை அரிசி மாவின் மேல் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கரண்டி வைத்து நன்கு கிளறவும். இரண்டும் நன்றாக சேரும் வரை கிளறவும்.
  9. அந்த மாவை மூடி வைத்து ஒரு நாள் முழுதும் ஊற வைக்கவும். அடுத்த நாள் மாவு கொஞ்சம் கெட்டியாக அதிரசம் போடுவதற்கு ஏற்றது போல் இருக்கும்.
  10. ஒரு வாழை இழை அல்லது பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவி வைத்துக் கொள்ளவும். ஒரு எலுமிச்சை அளவு மாவை எடுத்து உருட்டி கவரில் வைத்து வட்டமாக தட்டி நடுவே ஒரு ஓட்டை போடவும்.
  11. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெயை சூடாக்கவும். நன்றாக சூடானது தீயை மிதமாக வைத்து தட்டி வைத்துள்ள மாவை எடுத்து போடவும். ஒரு புறம் சிவந்ததும் திருப்பி போடவும். மறு புறம் சிவந்ததும் எடுத்து டிஸ்யு பேப்பரில் போடவும். அதிரசம் சீக்கிரமாக வெந்து விடும் அதனால் ஒரு ஒரு அதிரசமாக பொரித்து எடுக்கவும்.
குறிப்புகள் -
  1. ஒரு நாள் கழித்து மாவு மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது பால் சேர்த்து தளர்வாக பிசைந்து கொள்ளவும்.
  2. 250 கிராம் மாவுக்கு 10-13 அதிரசம் வரும். அதிரசதுக்கு நடுவே ஓட்டை போடாமலும் செய்யலாம்.
  3. எண்ணெயில் பொரித்தவுடன் அதிரசம் நன்றாக உப்பி வந்தால் டிஸ்யு பேப்பர் வைத்து நன்றாக அமுக்கி எண்ணெயை எடுக்கவும்.

16 comments:

  1. அதிரசம் பார்க்கவே சூப்பர்.

    ReplyDelete
  2. சகோதரி ஆசியாவின் கருத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. Paakum bodhe naakku oorudhu. My fav .

    ReplyDelete
  4. சவிதா வாங்க கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  5. Athirasam supper....eanakku naakkulaa ehil...uruthu HONEY pottu saappida aasaiya irukku.

    ReplyDelete
  6. என் மகளுக்கு அதிரசம் ரொம்ப பிடிக்கும் ..அம்மா தான் செய்து கொடுப்பாங்க ....உங்க ரெசிபி பார்த்து நானும் முயற்சிக்கிறேன் அக்கா ...

    ReplyDelete

  7. இதே முறையில் செய்தால் கண்டிப்பாக வந்து விடும். எனவே செய்து பாருங்கள் சங்கீதா.

    ReplyDelete
  8. மூன்று நாள் வைக்க வேண்டாமா? எனக்கு சொல்லிக் கொடுத்தவர்கள் மூன்று நாள் வைக்க சொன்னார்கள் .
    அதிரசம் பார்க்க அழகாய் இருக்கிறது.

    ReplyDelete
  9. சலித்த மாவில் வெல்லப் பாகை கலக்க வேண்டுமா?

    ReplyDelete
  10. arumai saapitu irukan. seimurai therthu kondan. vaalthukal.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...