பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- முட்டை - 2
- உருளைக்கிழங்கு - 1
- தக்காளி - 1
- மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
- மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி
- சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
- மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
- மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க -
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- பட்டை - 1 இன்ச் அளவு
- கிராம்பு - 2
- வெங்காயம் - 1/4 பங்கு
- கறிவேப்பிலை - சிறிது
- உருளைக்கிழங்கை தோலுரித்து நீள வாக்கில் நறுக்கி கொள்ளவும். தக்காளியை நீள வாக்கில் வெட்டி வைக்கவும்.
- இஞ்சி, பூண்டு, மல்லித்தழை மூன்றையும் மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
- தேங்காயுடன் 50 மில்லி தண்ணீர் சேர்த்து மிக்ஸ்சியில் அரைத்து பால் எடுத்து தனியே வைக்கவும். அதே தேங்காய் விழுதில் 200 மில்லி தண்ணீர் சேர்த்து பால் எடுத்து தனியே வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். பிறகு கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு, மல்லித்தழை மூன்றும் சேர்த்து அரைத்த கலவையை போட்டு வதக்கவும்.
- பின்னர் வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து 1 நிமிடம் கிளறி 200 மில்லி தண்ணீரில் எடுத்த தேங்காய் பாலை ஊற்றவும்.
- அவற்றுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள்தூள், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கொதிக்க விடவும்.
- உருளைக்கிழங்கு நன்கு வெந்து மசாலா வாடை போனதும் முட்டைகளை உடைத்து ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
- பின்னர் முதலில் எடுத்த தேங்காய்பாலை ஊற்றி நன்றாக கலக்கி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான முட்டை உருளைக்கிழங்கு கறி ரெடி.
No comments:
Post a Comment