தேவையான பொருள்கள் -
- வாழைக்காய் - 2
- மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
- காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- பொரிப்பதற்கு எண்ணெய் - 200 மில்லி
- முதலில் வாழைக்காய்களை தோலுரித்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து சிப்ஸ் போடும் பலகையை கடாயின் மேல் வைத்து எண்ணெய் கொள்ளும் அளவுக்கு வாழைக்காயை வட்ட வட்டமாக சீவவும்.
- சீவி முடித்தவுடன் தீயை கூட்டி மிதமான சூட்டில் வைத்து பொரித்து எடுக்கவும்.
- மீதமுள்ள வாழைக்காயையும் இதே முறையில் பொரித்து எடுத்து டிஸ்யு பேப்பரில் வைக்கவும்.
- எண்ணெய் உறிஞ்சியவுடன் சிப்ஸை எடுத்து ஒரு தட்டில் பரப்பி மிளகாய்தூள், காயத்தூள், உப்பு எல்லாவற்றையும் கலந்து சிப்ஸின் மேல் தூவி நன்றாக கலக்கவும்.
- ஒரு காற்றுப் புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். சுவையான வாழைக்காய் சிப்ஸ் ரெடி.
- வாழைக்காய் சிப்ஸை இந்த முறையில் செய்தால் சிப்ஸ் ஒன்றோடு ஓன்று ஒட்டாமல் நல்ல மொருகலாக வரும்.
- வாழைக்காயை மொத்தமாக வட்டவட்டமாக சீவி ஒரு பேப்பரில் பரப்பி ஓன்று ஒன்றாக எடுத்து எண்ணெயில் போட்டும் பொரித்து எடுக்கலாம்.
அக்கா,சூப்பர் பார்சல் ப்ளீஸ்.
ReplyDelete