Friday, January 24, 2014

பட்டர்பீன்ஸ் கேரட் பொரியல் / Butterbeans Carrot Poriyal

               

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. ப்ரெஷ் பட்டர்பீன்ஸ் - 100 கிராம் 
  2. கேரட் - 100 கிராம் 
  3. சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி 
  4. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
  5. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி 
  6. உப்பு - தேவையான அளவு                                                   
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. மிளகாய் வத்தல் - 1
  3. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  4. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  5. பெரிய வெங்காயம் - 2
  6.  கறிவேப்பிலை - சிறிது                             
செய்முறை -
  1. கேரட்டை தோலுரித்து சிறிதாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  2. குக்கரில் பட்டர் பீன்ஸ், கேரட் இரண்டும் முழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி மூடி அடுப்பில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும். நீராவி அடங்கியதும் மூடியை திறந்து தண்ணீரை வடித்து தனியே எடுத்து வைக்கவும்.                                               
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தல், கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.                                                                             
  4. வெங்காயம் பொன்னிறமானதும் அவித்து வைத்துள்ள பட்டர்பீன்ஸ், கேரட், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறி பின் சாம்பார் தூள், மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.
  5. இறுதியில் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
  6. சுவையான பட்டர்பீன்ஸ், கேரட் பொரியல் ரெடி. சாம்பார் சாதம், தயிர் சாதத்துடன் பரிமாறவும்.
குறிப்பு -
  1. வெங்காயம் பெரியதாக இருந்ததால் ஒன்று  போதுமானது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...