மைதா பிஸ்கட் / Maitha Biscuit
தேவையான பொருள்கள் -
- மைதா மாவு - 200 கிராம்
- சர்க்கரை ( சீனி ) 100 கிராம்
- சோடா உப்பு - 1 தேக்கரண்டி
- எண்ணெய் - பொரிபதற்கு தேவையான அளவு
செய்முறை -
- முதலில் சர்க்கரையை 50 மில்லி தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி வடிகட்டியில் ஊற்றி சுத்தமாக வடித்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாயகன்ற பாத்திரத்தில் மைதாமாவு, சோடா உப்பு இரண்டையும் கலந்து அதன் மேல் சர்க்கரை பாகை ஊற்றி கெட்டியாக பிசைந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
- ஊறிய பின் நடுத்தர உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
- அடுத்து சப்பாத்திக் கல்லில் எல்லா உருண்டைகளையும் வட்டமாக தேய்த்து கத்தியால் விரும்பிய வடிவத்தில் துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தீயை குறைத்து மிதமான சூட்டில் வைத்து கடாய் கொள்ளும் அளவுக்கு வெட்டி வைத்துள்ள பிஸ்கட்டுகளை போடவும். பிஸ்கட் வெந்ததும் திருப்பி போடவும்.
- இரண்டு புறமும் நன்கு வெந்ததும் எடுத்து டிஸ்யு பேப்பரில் பரப்பி வைக்கவும்.
- எண்ணெய் நன்கு உறிஞ்சியவுடன் ஒரு காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். சுவையான மைதா இனிப்பு பிஸ்கட் ரெடி.
No comments:
Post a Comment