Tuesday, January 21, 2014

சிறுகிழங்கு கடலைப்பருப்பு கூட்டு / Siru Kizhangu Kootu

   

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. சிறுகிழங்கு - 150 கிராம் 
  2. கடலைப்பருப்பு - 50 கிராம் 
  3. சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி 
  4. காயம் - 1/4 தேக்கரண்டி 
  5. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
  6. புளி - பாக்கு அளவு 
  7. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி 
  8. உப்பு - தேவையான அளவு                        
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. வெங்காயம் - 1/4 பங்கு நறுக்கியது 
  5. கறிவேப்பிலை - சிறிது                              
செய்முறை -
  1. குக்கரில் சிறுகிழங்கு மற்றும் அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வைக்கவும். கடலைப்பருப்புடன் காயம் சேர்த்து ஒரு சிறிய கிண்ணத்தில் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி நடுவில் வைத்து மூடி அடுப்பில் வைக்கவும். நீராவி வந்ததும் வெயிட் போடவும். 4 விசில் வரும் வரை வைத்திருந்து அடுப்பை ஆப் பண்ணவும்.                                                                         
  2.  நீராவி அடங்கியதும் மூடியை திறந்து கடலைபருப்பில் உள்ள நீரை வடித்து  தனியே வைக்கவும். குக்கரில் உள்ள நீரை வடித்து விட்டு சிறுகிழங்கை எடுத்து சிறிது நேரம் ஆறவிடவும்.
  3. ஆறிய பின் சிறுகிழங்குகளின் தோலை உரித்து சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
  4. புளியை 50 மில்லி தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.
  5. தேங்காய் துருவலை மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
  6. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  7. வெங்காயம் பொன்னிறமானதும் புளித் தண்ணீரை ஊற்றவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் அவித்து வைத்துள்ள கடலைப்பருப்பு, உப்பு, சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
  8. மசாலா வாடை போனதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, வெட்டி வைத்துள்ள சிறுகிழங்கு இரண்டையும் சேர்த்து கெட்டியாகும் வரை வைத்து அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.                                                                                         
  9. சுவையான சிறுகிழங்கு கடலைப்பருப்பு கூட்டு ரெடி.  

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...