பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
அரைக்க -
தாளிக்க -
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் - 1
- கறிவேப்பிலை - சிறிது
- முதலில் வாழைக்காயை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
- அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து வாழைக்காய் மற்றும் அது முழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி மஞ்சள்தூள், உப்பு சேர்த்து 10 நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும். தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.
- மிளகாய் வத்தல், சீரகம் இரண்டையும் தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊற வைத்து மிக்ஸ்சியில் அரைத்து கொள்ளவும். சிலருடைய மிக்சியில் அளவு கம்மியாக இருப்பதால் அரைக்க முடியாது. அதற்கு பதிலாக 1/2 தேக்கரண்டி மிளகாய் தூளும், 1 தேக்கரண்டி சீரகத்தூளும் சேர்த்து செய்யலாம்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் வேக வைத்துள்ள வாழைக்காய் துண்டுகளை சேர்த்து கிளறவும்.
- இறுதியில் அரைத்து வைத்துள்ள கலவை, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். உப்பு தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும்.
மிக அருமை.
ReplyDeleteஅரைத்து சேர்த்துள்ளது இன்னும் சுவை கூட்டி உள்ளது, என் பிளாக் பக்கம் வருகை தந்தமைக்கு மிக்க நன்றி தோழி..
DeleteVery nice
ReplyDelete