பரிமாறும் அளவு - 4 நபருக்கு
தேவையான பொருட்கள் -
- அரிசி - 200 கிராம்
- துவரம் பருப்பு - 100 கிராம்
- கேரட் - 1
- பட்டாணி - 1/2 கப்
- பீன்ஸ் - 15
- உருளைக்கிழங்கு - 1
- பெரிய வெங்காயம் - 1
- புளி - நெல்லிக்காய் அளவு
- வெல்லம் - சிறிது
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- மிளகாய் வற்றல் - 5
- கொத்தமல்லி - 2 மேஜைக்கரண்டி
- பட்டை - 2
- கிராம்பு - 4
- கச கசா - 1 மேஜைக்கரண்டி
- உளுந்தம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி
- கடலை பருப்பு - 1 மேஜைக்கரண்டி
- வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
- எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- நெய் - 1 மேஜைக்கரண்டி
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- மிளகாய் வற்றல் - 1
- அரிசியை நன்றாக கழுவி 500 மில்லி தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
- கேரட், உருளைக்கிழங்கை சதுரமாக வெட்டிக் கொள்ளவும். பீன்ஸ், வெங்காயம் ஆகியவற்றை நீளமாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- குக்கரில் பருப்பு, மஞ்சள் தூள், நறுக்கிய காய்கறிகள், பட்டாணி, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். காய்ந்த பட்டாணி உபயோகபடுத்தினால் முதல் நாள் இரவே ஊற வைத்திருக்க வேண்டும்.
- புளியை சிறுது தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். மிதமான தீயில் வைத்து கொத்தமல்லி, பட்டை, கிராம்பு, கச கசா, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, வெந்தயம், மிளகாய் வற்றல் ஆகியவற்றை போட்டு வறுத்துக் கொள்ளவும்.
- வறுத்தவற்றை ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு அடிகனமான பாத்திரத்தில் மிக்சியில் உள்ள கலவை, புளி தண்ணீர், வெல்லம், உப்பு, கறிவேப்பில்லை அனைத்தையும் சேர்த்து கொதிக்க விடவும்.
- கொதித்ததும் வேக வைத்த பருப்பு மற்றும் காய்கறிகளை சேர்க்கவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். சாம்பார் பதத்திற்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 5 நிமிடம் நன்றாக கொதித்ததும் வேக வைத்த சாதத்தை சேர்த்து கிளறவும். 5 நிமிடம் மறுபடி கொதித்ததும் அடுப்பை அணைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் எண்ணெய், நெய் ஊற்றவும். பிறகு கடுகு, பெருங்காயம், மிளகாய் வற்றல் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்கவும்.
- தாளித்ததை சாதத்தில் சேர்த்து கிளறவும். சுவையான பிசி பேலா பாத் ரெடி. தயிர் பச்சடி, அப்பளத்துடன் பரிமாறலாம்.
- வறுத்து அரைப்பதற்கு பதிலாக 3 மேஜைக்கரண்டி ரெடிமேட் பிசி பேலா பாத் பொடி வைத்தும் செய்யலாம்.
No comments:
Post a Comment