Friday, December 13, 2013

மட்டன் பிரியாணி / Mutton Biriyani - 1

       

பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பாஸ்மதி அல்லது சீரக சம்பா அரிசி - 2 கப்
  2. பெரிய வெங்காயம் - 1
  3. தக்காளி - 1
  4. மட்டன் - 250 கிராம்
  5. கொத்தமல்லி தழை மற்றும் புதினா - 1/2 கப்
  6. மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
  7. மல்லித் தூள் - 1 மேஜைக்கரண்டி
  8. கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
  9. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
  10. தயிர் - 2 மேஜைகரண்டி
  11. எலும்பிச்சை சாறு - 1 மேஜைக்கரண்டி
  12. உப்பு - தேவையான அளவு
அரைக்க -
  1. இஞ்சி - 1 இன்ச் அளவு
  2. பூண்டு - 6
  3. பச்சை மிளகாய் - 2
  4. பட்டை - 2
  5. கிராம்பு - 2
  6. சோம்பு - 1 மேஜைக்கரண்டி
தாளிக்க -

  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
  2. நெய் - 3 மேஜைக்கரண்டி
  3. பட்டை - 2
  4. கிராம்பு - 2
  5. பிரிஞ்சி இலை - 2
  6. சோம்பு - 1 மேஜைக்கரண்டி
செய்முறை -
  1. மட்டன், மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு , தயிர், எலுமிச்சை சாறு அனைத்தையும் கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். 
  2. வெங்காயம், தக்காளியை பொடிதாக நறுக்கி கொள்ளவும். கொத்தமல்லி தழை, புதினாவை சிறியதாக வெட்டி கொள்ளவும்.                                  
  3. அரிசியை கழுவி 30 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும். அரைக்க கொடுத்தவற்றை நன்கு அரைத்து கொள்ளவும்.                                                   

  4. குக்கரில் ஊற வைத்த மட்டன் கலவை மற்றும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி 5 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
  5. ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை மற்றும் சோம்பு போட்டு தாளிக்கவும்.
  6. பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். வதங்கியவுடன் அரைத்த கலவையை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின் தக்காளியை சேர்த்து சுருள வதக்கவும்.
  7. தக்காளி வதங்கியதும் தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி தழை, புதினா சேர்த்து கிளறவும்.
  8. அதன் பின் வேக வைத்த மட்டன் கலவையை சேர்த்து கொதிக்க விடவும். மட்டன் வேக வைக்கும் போதே ஒரு கப் தண்ணீர் சேர்த்ததால் இப்பொது 3 கப் தண்ணீரை சேர்க்கவும். (2 கப் அரிசிக்கு மொத்தம் 4 கப் தண்ணீர்)                                             
  9. கொதி வந்தவுடன் அரிசியை போட்டு கிளறி விட்டு உப்பு சரி பார்த்து பாத்திரத்தை மூடி விடவும். தீயை குறைத்து கொள்ளவும்.
  10. 10 - 15 நிமிடம் வரை கொதித்து தண்ணீர் வற்றியவுடன் அடுப்பை அணைக்கவும். அடி பிடிக்காமல் இருக்க நடுவில் ஓரிரு முறை மெதுவாக கிளறி விடவும். அடிக்கடி மூடியை திறந்து கிளற வேண்டாம். 
  11. அடுப்பில் இருந்து இறக்கிய பின்னர் ஒரு 15 நிமிடம் கழித்து மூடியை திறந்து மெதுவாக கிளறி விடவும். கொத்தமல்லி தழையைத் தூவி பரிமாறலாம்.

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...