பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- சிக்கன் - 100 கிராம்
- சிக்கன் 65 மசாலா - 2 மேஜைக்கரண்டி
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேஜைக்கரண்டி
- தயிர் - 3 மேஜைக்கரண்டி
- உப்பு - 1/4 தேக்கரண்டி
- பொரிப்பதற்கு எண்ணெய் - 100 கிராம்
- கறிவேப்பிலை - சிறிது
- ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சிக்கன், சிக்கன் 65 பவுடர், இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். சூடானதும் சிக்கன் துண்டுகளை போடவும். சிறிது நேரம் கழித்து திருப்பி போடவும். நன்கு மொறுகலாகும் வரை திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
- மீதமுள்ள எல்லா சிக்கன் துண்டுகளையும் இதே முறையில் பொரித்து டிஸ்யு பேப்பரில் வைக்கவும். அதே எண்ணெயில் சிறிது கறிவேப்பிலையை பொரித்து சிக்கன் துண்டுகள் மேல் போடவும்.
- எண்ணெய் நன்கு உறிஞ்சிய பிறகு பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும். சுவையான சிக்கன் 65 ரெடி.
பார்க்கவே சூப்பர்.
ReplyDelete