Friday, December 13, 2013

சிறுகிழங்கு பொரியல் / Sirukilangu Poriyal

                                     

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. சிறுகிழங்கு - 200 கிராம் 
  2. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
  3. சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி
  4. தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி
  5. உப்பு - தேவையான அளவு                            
     தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. பெரிய வெங்காயம் - 1
  5. பச்சை மிளகாய் - 2
  6. கறிவேப்பிலை - சிறிது                                   
செய்முறை -
  1. முதலில் சிறுகிழங்கை தண்ணீரில் 1 மணி நேரம் ஊற வைத்து  4 அல்லது 5 தடவை நன்றாக கழுவிக் கொள்ளவும். ஊற வைப்பதால் சிறுகிழங்கிலுள்ள மண் நன்றாக போய் விடும்.
  2. குக்கரில் கழுவிய சிறு கிழங்கு மற்றும் அது முழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி  வேக வைத்துக் கொள்ளவும். நீராவி அடங்கியதும் கிழங்குகளை எடுத்து சிறிது நேரம் ஆற விடவும்.
  3. நன்றாக ஆறிய பின் கிழங்குகளை தோலுரித்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் வெட்டி வைத்துள்ள சிறுகிழங்கு துண்டு, உப்பு சேர்த்து 1 நிமிடம் கிளறவும்.                                            
  6. இறுதியில் சீரகத்தூள், தேங்காய் துருவல் இரண்டையும் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான சிறுகிழங்கு பொரியல் ரெடி.

2 comments:

  1. எனக்குப் பிடித்த பொரியல் அக்கா,சூப்பர்,ஊரில் சீசன் இப்ப, ஃப்ரெஷாக இருக்கும்.

    ReplyDelete
  2. Ithoda keerai food aa edukkalama

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...