பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- பட்டர் காளான் - 200 கிராம்
- மைதாமாவு - 2 மேஜைக்கரண்டி
- அரிசி மாவு - 2 மேஜைக்கரண்டி
- கார்ன் ப்ளோர் - 1 மேஜைக்கரண்டி
- புட் கலர் - சிறிது
- பூண்டு - 8 பல்
- சில்லி சாஸ் - 1 மேஜைக்கரண்டி
- சோயா சாஸ் - 1 மேஜைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- கறிவேப்பிலை - சிறிது
- பொரிப்பதற்கு எண்ணெய் - 100 மில்லி
செய்முறை -
- முதலில் காளானை தண்ணீரில் அலசவும். சில காளானில் மேல் பகுதியில் கறுப்பாக காணப்படும், அவற்றை போக்க மெல்லிய காட்டன் துணியை வைத்து துடைத்தால் காளான் நல்ல வெண்மையாக மாறிவிடும்.
- சுத்தப்படுத்திய காளான், வெங்காயம், பூண்டு மூன்றையும் நறுக்கி வைக்கவும்.
- மைதாமாவு, அரிசிமாவு, கார்ன் ப்ளோர் மாவு மூன்றையும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
- கரைத்து வைத்துள்ள மாவில் காளான் துண்டுகளை மாவு கொள்ளும் அளவுக்கு டிப் பண்ணி வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடாய் கொள்ளும் அளவுக்கு காளான் துண்டுகளை போட்டு மிதமான சூட்டில் வைத்து பொரித்து எடுக்கவும்.
- மீதமுள்ள எல்லா காளான் துண்டுகளையும் இதே முறையில் டிப் பண்ணி பொரித்து எடுக்கவும். அதே எண்ணெயில் கறிவேப்பிலையை போட்டு பொரித்து தனியே வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து 3 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் நறுக்கி வைத்துள்ள பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் பொரித்து வைத்துள்ள காளான் துண்டுகளை போட்டு 1 நிமிடம் கிளறவும்.
- பின்னர் அதனுடன் புட் கலர், சோயாசாஸ், சில்லிசாஸ், உப்பு சேர்த்து எல்லாம் சேரும் வரை நன்றாக கிளறவும். பொரித்து வைத்துள்ள காளானில் உப்பு சேர்த்திருப்பதால் தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- கடைசியாக பொரித்து வைத்துள்ள கறிவேப்பிலையை போட்டு அடுப்பை அணைக்கவும்.
- சுவையான காளான் மஞ்சூரியன் ரெடி. சூடாக பரிமாறினால் சுவை நன்றாக இருக்கும். ப்ரைட் ரைஸுடன் பரிமாறலாம்.
No comments:
Post a Comment