பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
தாளிக்க -
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- பெரிய வெங்காயம் - 1
- கறிவேப்பிலை - சிறிது
- சீனிக்கிழங்கை தோலுரித்து பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடிதாக வெட்டி வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை, கறிவேப்பில்லை போட்டு வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் அடுப்பை சிம்மில் வைத்து வெட்டி வைத்துள்ள சீனிக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- கிழங்கு நன்றாக வெந்து சிவந்து வரும் போது மிளகாய்தூளை சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அடுப்பை அணைக்கவும்.
- சுவையான சீனிக்கிழங்கு ப்ரை ரெடி. சாம்பார் சாதம், புளிக் குழம்புசாதம், ரசம் சாதம், தயிர் சாதத்துடன் பரிமாறலாம். மசாலாத்தூள் அவரவர் விருப்பப்படி மாற்றி சேர்த்துக் கொள்ளலாம்.
ப்ரை ரொம்ப அருமையாக இருக்கின்றது...அடுத்த முறை இந்த காயில் செய்து பார்க்க வேண்டும்...
ReplyDelete