என்னுடைய 150 வது பதிவாக எனது அம்மாவைப் பற்றி எழுத ஆசைப்படுகிறேன்.
முதலில் எனது அம்மாவுக்காக ஒரு சின்ன கவிதை,
அம்மா நீ என்னை தோளிலும் மார்பிலும் சுமந்து
இந்த உலகத்தை காட்டியவள் நீ!
என்னை சுற்றி சுழன்று கொண்டிருக்கும்
மொத்த உலகமும் நீதான் அம்மா !
தாய்ப்பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டும் அல்ல எல்லா உயிரினங்களுக்கும் சொந்தமான பாசமாகும். அம்மாவுக்கு என் மேல் நிறைய பாசம் உண்டு. எனக்கும் என் அம்மா மேல் நிறைய பாசம் உண்டு. நான் இன்று வரை எல்லா விஷயங்களையும் அம்மாவிடம் பகிர்ந்து கொள்வேன். அப்படி பகிர்ந்து கொண்டால் தான் எனக்கு சந்தோஷமாக இருக்கும்.
எனது திருமணத்திற்கு முன்பு நான் அம்மாவுடன் இருக்கும் போது அவங்க கைப்பக்குவத்தில் செய்த சமையலை சாப்பிட்டு தான் வளர்ந்தேன். என்னை ஒரு வேலையும் செய்ய விட மாட்டாங்க. நான் எனது திருமணத்திற்கு பிறகு தான் அம்மாவின் சமையல் குறிப்புகளை கேட்டு ஒவ்வொன்றாக வைக்க ஆரம்பித்தேன். எனது வலைப்பூவில் நான் கொடுக்கும் சமையல் குறிப்புகள் அணைத்தும் எங்க அம்மாவிடம் கற்றுக்கொண்டவை தான். இப்போதும் நான் அம்மா வீட்டுக்கு செல்லும் முன் போனில் அம்மாவிடம் நான் வந்து சமையல் பண்ணுகிறேன் என்று சொல்வேன். அம்மாவும் சரி என்று சொல்வாங்க, ஆனால் நான் அங்கு சென்று பார்த்தால் எல்லாம் ரெடி பண்ணி வைத்திருப்பாங்க! சமையலில் அம்மாவின் கைப்பக்குவத்தோடு பாசமும் சேர்ந்து இருக்கும். இப்படி ஒரு அம்மா கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் இப்போதும் ஸ்வீட்ஸ், காரம் என்று எதை செய்தாலும் அதை செய்வதற்கு முன்னால் அம்மாவிடம் பக்குவம் கேட்டுத்தான் செய்வேன். அம்மாவும் பக்குவத்தை சந்தோசமாக சொல்வாங்க. எனக்கு தெரிந்தாலும் அம்மாவிடம் கேட்டு செய்தால் தான் எனக்கு நன்றாக வரும். நான் என் அம்மாவின் சமையலை விரும்புவது போல் அம்மாவும் என்னுடைய சமையலை ரொம்ப விரும்புவாங்க. என் வீட்டிற்க்கும் அம்மா வந்து இரண்டு வாரம் வரை இருப்பாங்க. அப்போது நான் செய்து கொடுக்கும் குழம்பு, பொரியல் வகைகளை விரும்பி சாப்பிடுவாங்க. அது எனக்கு சந்தோசமாக இருக்கும்.
என் அம்மாவுக்கு என்னுடைய மகன், மகள் இருவரிடமும் பாசம் அதிகம் உண்டு, அவங்களும் ஆச்சியிடம் பாசமாக இருப்பாங்க. அவர்கள் இருவரும் என் அம்மாவின் சமையலை ரசித்து ருசித்து சாப்பிடுவாங்க. என் மகனுக்கு என்னுடைய சமையலும், ஆச்சியின் சமையலும் மிகவும் பிடிக்கும். என்னுடைய மகள் ஆச்சியின் சமையலை விரும்பி சாப்பிடுவாள். அவளுக்கு என் அம்மாவின் முருங்கைக்காய் சாம்பார் ரொம்ப பிடிக்கும். இப்போது எனது மகனுக்கும், மகளுக்கும் திருமணம் ஆகி மகனுக்கு ஒரு வயது பெண் குழந்தையும், மகளுக்கு நான்கு வயதில் ஒரு பையனும் இருக்கிறார்கள். ஆனால் எனக்கும் என் அம்மாவுக்கும் உள்ள பாசம் அப்படியே தான் இருக்கிறது. இன்னும் எங்க அம்மாவைப் பற்றி எவ்வளவோ சொல்லிக்கொண்டே போகலாம். நம் எல்லோருக்கும் தாய்ப்பாசம் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
எனவே நமக்கு எவ்வளவு உறவுகள் இருந்தாலும் தாய்ப்பாசத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை. எனவே எல்லோரும் தாய்ப்பாசத்தை நல்லா அனுபவிங்க என்று சொல்லி விடை பெறுகிறேன்.
நன்றி
சாரதா,

அம்மா அம்மா தான் .மிக அருமையான பகிர்வு.உங்கள் அன்பு மிக அழகானது, நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ நல்வாழ்த்துக்கள்.150 பகிர்வுக்கு வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள்.பல்லாயிரமாக பெருகட்டும்.
ReplyDeleteஆசியா எனது அம்மாவின் பகிர்வை பார்த்து அம்மாவை வாழ்த்தியதற்க்கு மிக்க நன்றி.
ReplyDelete150 வது பதிவு அம்மாவை பற்றி சிறப்பாக எழுதி இருக்கீங்க, உங்களுக்கும் உங்கள அம்மாவுக்கும் வாழ்த்துக்கள்,
ReplyDeleteஜலீலா நீங்க என் வலைப்பூவுக்கு வந்து என்னையும்,அம்மாவையும் வாழ்த்தியதற்கு மிக்க நன்றி.
ReplyDeleteவரமாக பெற்ற தாய்
ReplyDeleteதாய் பால் உரமிட்டு
உமை வளர்த்தார்
ஒப்பற்ற ஒர் உயிரே
அப்பழுக்கற்ற அமுதம்
தாய்!
நன்றியுடன்,
புதுவை வேலு
கவிதை வடிவத்தில் கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி சகோ.
Deleteவணக்கம்
ReplyDeleteஇன்றுதங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ
http://blogintamil.blogspot.com/2015/03/blog-post_18.html?showComment=1426634644356#c423202049139672746
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
என்னுடைய வலைப்பூ இன்று வலைச்சரத்தில் அறிமுகமான தகவலுக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரூபன்.
Deleteஅன்பின் அருந்தகையீர்!
ReplyDeleteவணக்கம்!
இன்றைய...
வலைச் சரத்திற்கு,
தங்களது தகுதி வாய்ந்த பதிவு
சிறப்பு செய்துள்ளது!
வருக!
வலைச்சரத்தில் கருத்தினை தருக!
http://blogintamil.blogspot.fr/
நட்புடன்,
புதுவை வேலு
இன்றைய வலைச்சரத்தில் எனது அம்மா பதிவையும் என்னுடைய வலைப்பூவையும் அறிமுகப்படுத்தியதற்கும் மிக்க நன்றி. இந்த நல்ல நாளில் அம்மாவும் எங்கள் வீட்டில் தான் இருக்காங்க !
ReplyDeleteநமக்கு எவ்வளவு உறவுகள் இருந்தாலும் தாய்ப்பாசத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை முழுக்க முழுக்க உண்மை சாரதா. 150 பதிவை அம்மாவுக்காக ஒதுக்கியது அறிந்து மகிழ்ச்சி. இருவருக்கும் என் வாழ்த்துக்கள்! அம்மா நீண்ட ஆயுளைப் பெற்று உடல் நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன்!
ReplyDeleteமுதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கலையரசி.
ReplyDeleteவாழ்க்கையின் வாரங்களில் அம்மா வரம் போல் எதுவும் இல்லை.
ReplyDelete