Tuesday, February 25, 2014

முருங்கைக்காய் மசால் / Drumstick Masal

           
பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. முருங்கைக்காய் துண்டுகள் - 25
  2. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி 
  3. மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி 
  4. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி 
  5. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
  6. புளி - கோலி அளவு 
  7. உப்பு - தேவையான அளவு                        
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
  4. நறுக்கிய வெங்காயம் - 1/4 பங்கு 
  5. கறிவேப்பிலை - சிறிது                              
 அரைக்க -
  1. தேங்காய் - 4 மேஜைக்கரண்டி                 
செய்முறை -
  1. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து முருங்கைக்காய் மற்றும் அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
  2. வெந்ததும் தண்ணீரை வடித்து வைக்கவும். புளியை 100 மில்லி தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். தேங்காயை மிக்சியில் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.                      
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் பொன்னிறமானதும் புளித் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் மிளகாய்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும்.
  5. மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, அவித்து வைத்துள்ள முருங்கைக்காய் துண்டுகளை சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும்.     
  6. மசால் கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும். சுவையான முருங்கைக்காய் மசால் ரெடி. சாம்பார் சாதம், ரசம் சாதத்துடன் பரிமாறலாம்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...