Tuesday, February 18, 2014

பூசணிக்காய் கூட்டு / Poosanikai Kootu / Pumpkin Kootu

பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பூசணிக்காய் - 150 கிராம் 
  2. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
  3. அச்சு வெல்லம் - சிறிது அல்லது மண்டை வெல்லத்தூள் - 1 மேஜைக்கரண்டி 
  4. உப்பு - தேவையான அளவு                         
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி 
  2. பச்சை மிளகாய் - 2
  3. சீரகம் - 1 தேக்கரண்டி 
  4. நறுக்கிய சின்ன வெங்காயம் - 4                
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. நறுக்கிய வெங்காயம் - 1/4 பங்கு 
  5. கறிவேப்பிலை - சிறிது                               
செய்முறை -
  1. பூசனிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். அரைக்க கொடுத்தவற்றை மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.                          
  2. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள பூசணிக்காய் துண்டுகளை போட்டு அதனுடன்  உப்பு, மஞ்சள்தூள், அச்சுவெல்லம் மற்றும் 50 மில்லி தண்ணீரும் சேர்த்து கொதிக்க விடவும்.                                                                               
  4. பூசணிக்காய் வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்க்கவும்.
  5. கொதி வந்து கூட்டு கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும். சுவையான பூசனிக்காய் கூட்டு ரெடி. புளிக்குழம்பு சாதம், ரசம் சாதத்துடன் சேர்த்து பரிமாறலாம்.

6 comments:

  1. அக்கா, ஒரு பூசணிக்காய் இன்று கிடைத்தது,அதை கழுவி சீவி நறுக்கி வச்சிட்டு வந்தால் இங்கே உங்க போஸ்ட். சூப்பர்.என் பேஸ்புக் பேஜ் பாருங்க.தெரியும்.

    ReplyDelete
  2. ஓ இங்கு மஞ்சள் பூசணி யா? ரொம்ப நல்ல இருக்கு , நான் சும்மா ஒரு பத்தை வாங்கி வைத்துள்ளேன் போன வாரமே சாம்பார் செய்துட்டு மீதி இருக்கு.

    ReplyDelete
  3. Super kootu akka, romba nalla irrukku...

    ReplyDelete
  4. ஆசியா உங்கள் பேஸ்புக் பேஜ் பார்த்து விட்டேன்.

    ReplyDelete
  5. ஜலீலா மீதி உள்ள பூசணியை சீக்கிரம் வைத்து விடுங்க.

    ReplyDelete
  6. ப்ரியா முதன் முதலாக என் வலைப்பூவுக்கு வந்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...