பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- பாசிப்பருப்பு - 100 கிராம்
- காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
- உருளைக்கிழங்கு - 1
- கேரட் - 1
- தக்காளி -1
- பச்சை மிளகாய் -1
- அச்சு வெல்லம் - சிறிய துண்டு
- சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி
- மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- மல்லித்தழை - சிறிது
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
- நறுக்கிய வெங்காயம் - 1/4 பங்கு
- கறிவேப்பிலை - சிறிது
- அடுப்பில் கடாயை வைத்து பாசிப்பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
- குக்கரில் பருப்பு மற்றும் அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, காயத்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
- உருளைக்கிழங்கு, கேரட், தக்காளி, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் வெட்டி வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கு, கேரட், பச்சை மிளகாய், தக்காளி எல்லாவற்றையும் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
- பின்னர் சாம்பார்பொடி, மஞ்சள்தூள் சேர்த்து ஒரு தடவை கிளறி அதனுடன் உப்பு, 200 மில்லி தண்ணீரும் சேர்த்து கொதிக்க விடவும்.
- காய்கள் நன்கு வெந்து மசாலா வாடை அடங்கியதும் அவித்து வைத்துள்ள பருப்பு, வெல்லத் துண்டு சேர்த்து கொதிக்கவிடவும்.
- சாம்பாரை சுற்றி நுரை கூடி வரும் போது மல்லித்தழையை தூவி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான டிபன் சாம்பார் ரெடி.
No comments:
Post a Comment