Monday, April 7, 2014

அப்பாவின் நினைவுகள்



நீங்காத நினைவுகளை என் மனதில் விட்டுச் சென்ற என் அப்பாவைப் பற்றிய ஞாபகங்களை உங்கள் எல்லோரிடமும் சொல்கிறேன்.

அப்பா பெயர் மா.தியாகராஜ். அப்பா பி .ஏ கணிதம் எடுத்து பாளையங்கோட்டையில் உள்ள புனித சவேரியர் கல்லூரியில் படிச்சவங்க. தாசில்தாராக இருந்து பதவி ஓய்வு பெற்றவங்க.

அப்பாவுடன் எனது குழந்தைப் பருவம் குரும்பூரிலும், சேரன்மகாதேவியிலும் கழிந்தது. இந்த போட்டோ குரும்பூரில் ஸ்டுடியோ திறந்த அன்று அப்பாவையும் என்னையும் வைத்து முதல் போட்டோவாக ஸ்டுடியோ ஓனர் எடுத்ததாக அப்பா என்னிடம் சொல்வாங்க.

                                               அப்பாவுடன் நான் மூன்று வயதில்

பள்ளிக்கு செல்லும் வயதில் அப்பா என்னை தூத்துக்குடியில் உள்ள பள்ளியில் முதலாம் வகுப்பு சேர்த்து விட்டாங்க. எங்கள் கால கட்டங்களில் பெண் குழந்தைகளை அவ்வளவாக படிக்க வைக்க மாட்டங்க. ஆனால் அப்பா என்னை பி .ஏ  வரைக்கும் படிக்க வச்சாங்க! இரண்டாம் வகுப்பு வரை தூத்துக்குடியிலும், மூன்றாம் வகுப்பு செங்கோட்டையிலும், நான்காம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை  பாளையங்கோட்டையில் உள்ள மேரிஆர்டன் பள்ளியிலும், ஒன்பதாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரை சாராள்தக்கர் பள்ளியிலும் படித்து உயர்நிலை கல்வியை படிக்க வச்சாங்க.

பி .யு .சி முதல் பி .ஏ வரை  சாராள் தக்கர் கல்லூரியில் சேர்த்து கல்லுரி படிப்பை படிக்க வச்சாங்க. எங்கள் குடும்ப உறவுகளில் என்னைத் தான் முதன் முதலாக கல்லூரி படிப்பு படிக்க வைத்த பெருமை அப்பாவுக்கு இன்றும் உண்டு.

அப்பா எனக்கு அன்று கல்வி அறிவை கொடுத்ததால் தான் இன்று கணினியில் வலைப்பூ ஆரம்பித்து என்னுடைய  சமையல் குறிப்புகளை பகிர்ந்து கொள்ள முடிகிறது. என்னுடைய இந்த வளர்ச்சிக்கு காரணம் என்னை படிக்க வைத்த அப்பா தான்!

அப்பா எனக்கு திருமண வயது வந்ததும் எனக்கு திருமணத்தை சிறப்பாக செய்து வச்சாங்க. எனக்கு நல்ல துணையை தேடித் தந்த பெருமை இன்றும் அப்பாவுக்குத் தான்!

எனது கணவர் பேங்கில் வேலை பார்த்ததால் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ட்ரான்ஸ்பர் ஆகி குழந்தைகளுடன் நாங்கள் வெளியூரில் இருப்போம். அப்பாவும், அம்மாவும் பாளையங்கோட்டையில் இருந்தாங்க. நாங்கள் லீவில் குழந்தைகளுடன் பாளைக்கு வருவோம்.                                                                      
1993 ஆம் ஆண்டு திருச்சிக்கு அருகில் உள்ள முசிறியில் இருந்த போது நான் அப்பாவிடம் எங்களுக்கு வீடு கட்டுவதற்கு பாளையில் ஒரு இடம் பாருங்கள் என்று சொன்னேன். அப்பாவின் முயற்சியால் எங்களுக்கு வீடு கட்டுவதற்கு இடம் கிடைத்தது. நாங்களும் வீடு கட்டும் பணியை ஆரம்பித்து விட்டு முசிறிக்கு சென்று விட்டோம். அப்பா கொத்தனார் முதல் பெயின்ட்டர் வரை எல்லோரையும் பார்த்து அன்றைய கூலியை சரியாக பேசி அப்பாவின் மேற்ப்பார்வையில் ஆறு மாதங்களில் வீடு கட்டும் பணி சிறப்பாக 1994 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முடிந்தது. ஜூன் மாதம் 12 ஆம் தேதி உறவினர்கள் எல்லோரையும் அழைத்து  எங்களுடைய புதுவீட்டுக்கு  நல்ல முறையில் பால் காய்ச்சினோம். எங்களுக்கு சொந்த வீடு கிடைக்க காரணமாக இருந்தது அப்பாதான்!

 புதுவீட்டுக்கு பால் காய்ச்சிய போது அப்பா எங்களை ஆசீர்வாதம் பண்ணிய போது எடுத்த போட்டோ. அருகில் நிற்பபது அம்மா.                                   

எனது பையனும், பொண்ணும் B . E  முடித்து இருவருக்கும் Software Company யில் வேலை கிடைத்தது. இதை அறிந்து அப்பா மிகவும் சந்தோசப்பட்டாங்க. சில மாதங்களுக்கு பிறகு அப்பா எங்களை விட்டு மறைந்து விட்டாங்க. 12.12.2006  இரவு 12 மணியிலிருந்து அப்பா எங்களுடன் இல்லை.

பையன், பொண்ணு இருவருடைய திருமணத்தையும் அப்பாவுக்கு பார்க்க கொடுத்து வைக்கவில்லை. இருந்தாலும் அப்பா தெய்வமாக இருந்து எங்கள் எல்லோரையும் ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்புகிறேன்.

நாட்கள் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆனால் அப்பாவின் நினைவு மட்டும் என் மனதை விட்டு நீங்கவில்லை. அப்பா நீங்கள் என் அருகில் இல்லை. ஆனால் என் மனதில் எப்போதும் இருக்கீங்க.

இப்போது நானும், எனது கணவரும் எங்கள் சொந்த வீட்டில் நிம்மதியாக இருப்பதற்கு காரணம் அப்பாதான்!

என் அப்பாவின் நினைவுகளை உங்கள் அணைவரிடம் பகிர்ந்து கொண்டதில் எனக்கு இன்று சிறிய ஆறுதல் கிடைத்தது.

அம்மா அப்பாவுடன் வசித்த அவங்க சொந்த வீட்டில் இருக்காங்க. அம்மா பதிவும் கொடுத்திருக்கிறேன்.

எனது அம்மா பதிவை பார்க்க இங்கே கிளிக் பண்ணவும்.

நன்றி
சாரதா

                                         


4 comments:

  1. it is good to read the memories of your father. only father's motivates us to do higher education.

    ReplyDelete
  2. தங்களது சிறு வயது அப்பாவுடனான நினைவோட்டங்களும், அதன் தொடர்ச்சியாய் சொன்ன விடயங்களும் மனதை உலுக்கி விட்டது சகோ.

    ReplyDelete
  3. தந்தையர் தினமான இன்று எனது அப்பாவின் நினைவுகளை படித்து சொன்ன கருத்துக்கு மிக்க நன்றி சகோ.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...