Saturday, April 5, 2014

தட்டப்பயறு குழம்பு / Thatta Payiru Kulambu


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையானபொருள்கள் -
  1. தட்டப்பயறு - 50 கிராம்
  2. மிளகாய்த் தூள் - 1/4 தேக்கரண்டி
  3. மல்லித் தூள் - 2 மேஜைக்கரண்டி
  4. சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
  5. மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
  6. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  7. புளி - நெல்லிக்காய் அளவு
  8. உப்பு - தேவையானஅளவு
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1 தேக்கரண்டி
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
  4. வெங்காயம் - 1/4 
  5. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை -
  1. தட்டப்பயறை நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். புளியை 50 மில்லி தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும். வெங்காயத்தை பொடிதாக நறுக்கி கொள்ளவும்.
  2. அடுப்பில் குக்கரை வைத்து தட்டபயிறு மற்றும் அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும். நான்கு விசில் வந்ததும் அடுப்பை ஆப் பண்ணி விடவும். நீராவி அடங்கியதும் மூடியைத் திறந்து தண்ணீரை நன்கு வடித்து தனியாக எடுத்து வைக்கவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு தாளிக்கவும். 
  4. வெங்காயம் பொன்னிறமானதும் மிளகாய்த் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், மிளகுத் தூள் மற்றும் மஞ்சள் தூள் போட்டு 1 நிமிடம் கிளறவும். 
  5. பிறகு புளித் தண்ணிர், 200 மில்லி  தண்ணீர், தட்டப்பயறு மற்றும் உப்பு சேர்த்து மசாலா வாடை போகும் வரை நன்கு கொதிக்க விடவும். 
  6. குழம்பு கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். தட்டப்பயறு குழம்பு ரெடி. தட்டபயறு குழம்பு இட்லி, தோசை, சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.  

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...