|
தேவையான பொருள்கள் -
- சிக்கன் - 300 கிராம்
- தக்காளி - 1
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி தழை - சிறிது
- மிளகாய் வத்தல் - 2
- கொத்தமல்லி - 4 மேஜைக்கரண்டி
- பெருஞ் சீரகம் - 1 தேக்கரண்டி
- பட்டை - 1 இன்ச் அளவு
- கிராம்பு - 2
- இஞ்சி - 1 இன்ச் அளவு
- பூண்டு - 4 பல்
- தேங்காய் - 50 கிராம்
- சின்ன வெங்காயம் - 7
செய்முறை -
- முதலில் சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டி நன்றாக கழுவிக் கொள்ளவும்.
- தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வத்தல், கொத்தமல்லி, பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும். மிதமான தீயில் வைத்து வறுக்கவும். கடைசியாக தேங்காய் துருவலை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்.
- வறுத்தவற்றை ஆறியதும் மிக்ஸ்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
- தக்காளி வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.
- பின்னர் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறவும். சிக்கன் பாதி வெந்ததும் 300 மில்லி தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கி குக்கரை மூடி விடவும்.
- நீராவி வந்ததும் வெயிட் போடவும். 4 விசில் வந்ததும் அடுப்பை ஆப் பண்ணி விடவும். அல்லது உங்கள் குக்கருக்கு ஏற்ப விசில் விட்டு இறக்கவும்.
- நீராவி அடங்கியதும் மூடியை திறந்து குழம்பை பாத்திரத்திற்கு மாற்றி விடவும். கொத்தமல்லி தழையை சேர்த்து கலக்கி விடவும். சுவையான சிக்கன் குழம்பு ரெடி.
- எலும்போடு இருக்கும் சிக்கன் துண்டகள் தான் குழம்பிற்கு நல்ல ருசியை கொடுக்கும்.