பரிமாறும் அளவு - 3 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- சேமியா - 100 கிராம்
- பால் - 200 மில்லி
- ஜவ்வரிசி - 75 கிராம்
- சர்க்கரை - 200 கிராம்
- முந்திரிப் பருப்பு - 10
- காய்ந்த திராட்சை - 10
- ஏலக்காய் பவுடர் - 1/2 தேக்கரண்டி
- நெய் - 1 தேக்கரண்டி
- அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் சேமியாவை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
- அதே கடாயில் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, திராட்சையை போட்டு பொன்னிறமாக வறுத்து வைக்கவும் .
- ஜவ்வரிசியை அரை மணி நேரம் வெந்நீரில் ஊற வைத்து வடித்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் ஊறிய ஜவ்வரிசி மற்றும் 100 மில்லி தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் 10 நிமிடம் வேக விடவும்.
- நன்கு வெந்ததும் சேமியா, பால் சேர்த்து சிம்மில் வைத்து கொதிக்க விடவும்.
- இரண்டு நிமிடம் ஆனதும் சரக்கரையை சேர்த்து கரையும் வரை நன்றாக கலக்கவும்.
- பின்னர் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, ஏலக்காய் பவுடர் எல்லாவற்றையும் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சேமியா பாயசம் ரெடி.
- சேமியா பாயசத்தை அதே பாத்திரத்தில் வைத்திருந்தால் இறுகி விடும். எனவே வேறு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.
Wish you the same.Loved your kozhukattai.
ReplyDeleteமிகவும் பிடிக்கும். சில சமயம் வீட்டில் செய்யும்போது சேமியாவும், பாயசமும் கலக்காமல் தனித்தனியாய் நிற்கும்!
ReplyDeleteகருத்துக்கு நன்றி சகோ.
ReplyDeleteவணக்கம் !
ReplyDeleteசித்தம் கவர்ந்திழுக்கும் சேமியா பாயாசம்
நித்தம் உண்போம் நெகிழ்ந்து !
அருமை வாய் ஊறுது
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDelete