பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- கோதுமை மாவு - 1/4 கிலோ
- பால் - 100 மில்லி
- தண்ணீர் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - 50 மில்லி
- தேவையான அளவு தண்ணீரை லேசாக சுட வைத்துக் கொள்ளவும். கை பொறுக்கும் அளவுக்கு சூடாக்கவும். பால் மிதமான சூட்டில் அல்லது ஆறிய பாலாக இருக்க வேண்டும்.
- வாயகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- பிறகு பாலை ஊற்றி கிளறவும். கொஞ்சம் கொஞ்சமாக வெந்நீரை ஊற்றி மாவை நன்றாக பிசைந்து உருட்டிக் கொள்ளவும்.
- கடைசியாக ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி லேசாக பிசைந்து ஈரத் துணியால் மூடி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- மாவை எலுமிச்சை அளவு எடுத்து உருண்டையாக உருட்டி வைக்கவும். மீதமுள்ள எல்லா மாவையும் இதே போல் உருட்டிக் கொள்ளவும்.
- ஒரு உருண்டையை எடுத்து பூரிக் கட்டையால் தேய்க்கவும். சிறிது கோதுமை மாவை இருபுறமும் தடவி தேய்க்கவும்.
- அடுப்பில் சப்பாத்திக் கல்லை வைத்து சூடானதும் சப்பாத்தியை போடவும். ஒரு நிமிடம் கழித்து திருப்பி போடவும். சிவந்து வரும் போது சுற்றி எண்ணெய் விடவும்.
- சப்பாத்தி நன்கு வெந்ததும் எடுத்து விடவும். சுவையான சப்பாத்தி ரெடி.
Hi saratha , first time in ur blog.chapathi la milk sethu senjurukarathu super idea. naanum try pannanum..soft irukku :)
ReplyDelete