மோதக கொழுக்கட்டை
தேவையானபொருள்கள் -
- பச்சரிசி மாவு - 1 கப் ( 200 ) கிராம்
- கடலைப்பருப்பு - 100 கிராம்
- வெல்லம் (பொடித்தது) - 100 கிராம்
- தேங்காய் துருவல் - 100 கிராம்
- ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
- உப்பு - 1/4 தேக்கரண்டி
- நெய் - 2 மேஜைக்கரண்டி
செய்முறை -
- முதலில் கடலைப்பருப்பை நன்றாக கழுவி அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர் பருப்பு மற்றும் தண்ணீரை குக்கரில் வைத்து 2 விசில் விட்டு வேக வைத்து கொள்ளவும்.
- நீராவி அடங்கியதும் தண்ணீரை நன்கு வடித்து பருப்பை சிறிது நேரம் ஆறவிடவும்.
- ஆறியதும் பருப்புடன் தேங்காய் துருவலையும் சேர்த்து கரகரப்பாக மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் அடிக்கனமான பாத்திரத்தை வைத்து பொடித்த வெல்லத்துடன் 25 மில்லி தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும்.
- வடிகட்டிய பாகை மீண்டும் அதே பாத்திரத்தில் கொதிக்க விடவும். நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் ஒரு மேஜைக்கரண்டி நெய், பருப்புக்கலவை, ஏலக்காய்தூள் சேர்த்து பூரணம் கெட்டியாகும் வரை கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். பூரணம் ரெடி.
- அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1 1/4கப் தண்ணீர், உப்பு, ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். கொதித்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
- கொதித்த வெந்நீரை அரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கரண்டியின் பின்புறத்தால் நன்கு கிளறவும். மாவு கட்டி இல்லாமல் கொஞ்சம் தளர்வாக இருக்க வேண்டும். மேல் மாவு ரெடி.
- பெரிய எலுமிச்சை அளவுக்கு மாவை எடுத்து தட்டி நடுவில் பூரணத்தை வைத்து மாவை மூடி விட வேண்டும்.
- மீதமுள்ள எல்லா மாவையும் இதே முறையில் செய்து வைத்துக் கொள்ளவும்.
- இட்லி பாத்திரத்தில் கொழுக்கட்டைகள வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும். மோதக கொழுக்கட்டை ரெடி.
நல்ல குறிப்பு. நன்றி.
ReplyDeleteஎன்னுடைய வலைப்பூ வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteLooks good and tempting :)
ReplyDeleteசாந்தி உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
ReplyDeleteSuperb ....
ReplyDeleteஅருமைம்மா சதூர்த்தி அன்று செய்கிறேன்.
ReplyDeleteசரியா,
நன்றிமா