பரிமாறும் அளவு - 4 நபருக்கு
தேவையான பொருள்கள் -
செய்முறை -
- பில்டரின் மேல் பாகத்தில் 1/2 மேஜைக்கரண்டி சர்க்கரை மற்றும் 4 மேஜைக்கரண்டி காப்பித்தூளை போட்டு நன்றாக அமுக்கிவிடவும்.
- ஒரு கப் ( 200 மில்லி ) தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து காப்பித்தூளின் மேல் மெதுவாக ஊற்றவும். 15 நிமிடங்களில் பில்டரின் கீழ் பாகத்தில் டிகாஷன் இறங்கி விடும்.
- பாலை தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.
- 150 மில்லி பால், 25 மில்லி டிகாஷன் என்ற அளவில் கலந்து தேவையான அளவு சர்க்கரையும் சேர்த்து நுரை வர ஆற்றி டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.
- இரண்டு வகையான பில்டர் காப்பித்தூள்களை வாங்கி ஒன்றாக கலந்து ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். இதை வைத்து செய்தால் காபி நல்ல சுவையாக இருக்கும்.
- காபி ஒரிஜினல் சுவையில் வேண்டுமென்றால் அன்று கறந்த பாலில் தயாரிக்கவும்.
- பாலை அதிக நேரம் கொதிக்க வைக்க கூடாது. ஒரு கொதி வந்தாலே போதும்.
காஃபி மணம் மனதை கொள்ளை கொண்டதே!சூப்பர்.
ReplyDelete