பரிமாறும் அளவு - 3 நபருக்கு
தேவையானபொருள்கள் -
தாளிக்க -
செய்முறை -
தேவையானபொருள்கள் -
- துவரம் பருப்பு - 100 கிராம்
- காயம் -1/4 தேக்கரண்டி
- முருங்கைக்காய் துண்டுகள் - 8
- தக்காளி - 1
- பச்சை மிளகாய் - 1
- சின்ன வெங்காயம் - 3
- மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
- மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி
- சீரகத்தூள் - 1 மேஜைக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- புளி - நெல்லிக்காய் அளவு
- உப்பு - தேவையான அளவு
- மல்லித் தழை - சிறிது
தாளிக்க -
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
- வெங்காயம் - சிறிது
- கறிவேப்பிலை - சிறிது
- குக்கரில் பருப்பு, காயம், மஞ்சள் தூள் மற்றும் முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.
- தக்காளி, மிளகாயை நீளவாக்கில் வெட்டி வைக்கவும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைத்துக் கொள்ளவும்.
- புளியை 300 மில்லி தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- குழம்பு வைக்கும் பாத்திரத்தில் 300 மில்லி புளித் தண்ணீருடன் முருங்கைக்காய், நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து கொதிக்கவிடவும்.
- ஐந்து நிமிடங்கள் ஆனதும் மிளகாய்த் தூள், மல்லித்தூள், சீரகத்தூள் சேர்த்து மசாலா வாடை போகும்வரை நன்றாக கொதிக்கவிடவும்.
- மசாலா வாடை போனதும் வேக வைத்துள்ள பருப்பை போட்டு நன்றாக கலக்கிவிடவும். கொதித்ததும் மல்லித் தழையை தூவி அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு, வெங்காயம் போட்டு தாளிக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் சாம்பாரில் சேர்த்து நன்றாக கலக்கிவிடவும். சுவையான முருங்கைக்காய் சாம்பார் ரெடி.
drumstick is always my fav.loved your sambar.
ReplyDeleteசூப்பர்
ReplyDeleteநன்றி
ReplyDelete