Wednesday, September 11, 2013

அரைக்கீரை பருப்புக் கூட்டு / Araikeerai Paruppu Kootu

பரிமாறும் அளவு - 3 நபருக்கு

தேவையானபொருள்கள் -
  1. அரைக் கீரை - 4 கப்
  2. பாசிப் பருப்பு - 100 கிராம்
  3. காயம் - சிறிது
  4. சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி
  5. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  6. உப்பு - தேவையான அளவு
அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
  2. சின்ன வெங்காயம் - 4
  3. தக்காளி -1 சிறியது 
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
  2. கடுகு - 1 தேக்கரண்டி
  3. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
  4. வெங்காயம் - 1/4
  5. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை -
  1. முதலில் கீரையை நன்றாக ஆய்ந்து சுத்தமாக கழுவி வைக்கவும். கழுவிய கீரையை பொடிதாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயத்தை பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். அரைக்க கொடுத்தவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பு, காயம், மஞ்சள் தூள் சேர்த்து முழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். பருப்பு வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
  3. அதே பாத்திரத்தில் 100 மில்லி தண்ணீர் ஊற்றி சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். மசாலா வாடை போனதும் கீரையை சேர்த்து 2 நிமிடம் நன்றாக கிளறி விடவும்.
  4. பிறகு வேக வைத்த பருப்பு, தேங்காய் விழுது எல்லாவற்றையும் சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும். கூட்டு கெட்டியானதும் இறக்கி விடவும்.
  5. ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும்.
  6. வெங்காயம் பொன்னிறமானதும் கீரையில் சேர்க்கவும். சுவையான கீரை பருப்புக்கூட்டு ரெடி.

3 comments:

  1. அரைக்கீரை கூட்டு மிக அருமை.நல்ல ருசி.

    ReplyDelete
  2. aria keerai inge kidaippadhe illai.unga kurippa paartha udan ,romba aasaia irukku.

    ReplyDelete
  3. seyurai kuripu aruai. nallaa irukku.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...