.
பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
தாளிக்க -
பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- அவரைக்காய் - 150 கிராம்
- முட்டை - 1
- தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி
தாளிக்க -
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 2
- கறிவேப்பிலை - சிறிது
- அவரைக்காயை பொடிதாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் வெட்டி வைத்துள்ள அவரைக்காய், உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கிளறவும்.
- காய் நன்கு வெந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும். முட்டை வெந்ததும் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான அவரைக்காய் முட்டை பொரியல் ரெடி.
viththiyaasamana poriyal. ithuvarai uttai serththu seythathillai.
ReplyDeleteசெய்து பார்த்து உங்கள் கருத்தை சொல்லவும்.
Delete