பரிமாறும் அளவு - 3 நபருக்கு
தேவையான பொருள்கள் -
தேவையான பொருள்கள் -
- பட்டர் பீன்ஸ் - 100 கிராம்
- உப்பு - தேவையானஅளவு
- மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
- மல்லித் தூள் - 2 மேஜைக்கரண்டி
- சீரகத் தூள் -1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- இஞ்சி - ஒரு சிறிய துண்டு
- பூண்டு - 4 பல்
- பட்டை - ஒரு இன்ச் அளவு
- கிராம்பு - 2
- தேங்காய்துருவல் - 4 மேஜைக்கரண்டி
- வெங்காயம் - 1/4
- பழுத்த தக்காளி - 1
- நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- உளுந்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி
- வெங்காயம் - 1/4
- கறிவேப்பிலை - சிறிது
- ஒரு பாத்திரத்தில் பட்டர்பீன்ஸ், சிறிது உப்பு மற்றும் முழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும். குக்கரில் வைத்தால் குழைந்து விடும்.
- மிக்சியில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு எல்லாவற்றையும் சேர்த்து லேசாக தண்ணீர் விட்டு நல்ல மையாக அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
- பின்னர் தேங்காய், வெங்காயம், தக்காளி சேர்த்து மிக்சியில் தனியாக அரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து என்னை ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
- கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறவும்.
- ஒரு நிமிடம் கழித்து வேக வைத்திருக்கும் பட்டர்பீன்ஸ், ஒரு கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்க்கவும். உப்பு சரி பார்த்துக் கொள்ளவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும்.
- குழம்பு கெட்டியாகும் வரை அடுப்பில் வைத்திருந்து இறக்கி விடவும். இதனை சாதம், சப்பாத்தி, பூரியுடன் சேர்த்து சாப்பிடலாம்.
No comments:
Post a Comment